துல்லியத் தாக்குதல் தின கொண்டாட்டம் என்பது அரசியல் திணிப்பு அல்ல, தேசப்பற்று என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துல்லியத் தாக்குதல் என்பது ராணுவத்தின் தாக்குதல் முறைகளில் ஒன்றாகும். சரியான இராணுவ இலக்கிற்கு மட்டுமே சேதம் விளைவிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் ரகசிய தாக்குதல் முறை ஆகும்.


2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் நாள் இந்திய ராணும் இந்த துல்லியத் தாக்குதல் முறையினை 7 பயங்கரவாத அமைப்புகளின் மீது செயல்படுத்தி எல்லையினை மீட்டெடுத்தனர். அந்த வகையில் செப்டம்பர் 29-ஆம் நாள் துல்லியத் தாக்குதல் தினமாக கொண்டாடப்படுகின்றது.


இந்நிலையில் தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இந்த துல்லியத் தாக்குதல் தினத்தை கொண்டாட வேண்டும் என வலியுறுத்தி துல்லியத் தாக்குதல் தின கொண்டாட்டம் குறித்த அறிக்கையினை பல்கலை கழுக துணை வேந்தர்கள் சமர்பிக்க வேண்டுமாய் UGC அறிவித்துள்ளது.


ஆனால் இந்த தினத்தினை மேற்கு வங்க கல்வி நிலையங்களில் கொண்டாட முடியாது என கல்வி அமைச்சர் பார்தா சாட்டர்ஜி எதிர்ப்பு கொடி காண்பித்துள்ளார். துல்லியத் தாக்குதல் என்பது பாஜக-வின் நிரல்களில் ஒன்றாகும். இராணுவ கொள்கைகளை பாஜக கல்வி நிலையங்களில் புகுத்த முயல்கின்றது. எனவே துல்லியத்தினத்தினை மேற்கு வங்க கல்வி நிலையங்களில் கொண்டாடப்படாது என தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் இந்த கருத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவிக்கையில்... துல்லியத் தாக்குதல் தின கொண்டாட்டம் என்பது அரசியல் தினிப்பு அல்ல, தேசப்பற்றின் வெளிப்பாடு என தெரிவித்துள்ளார்.