புதுடெல்லி: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு தொடர்பாக போதைப்பொருள் சதி தொடர்பாக நடிகை ரியா சக்ரவர்த்தி மீது போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு (Narcotics Control Bureau) கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளது. சுஷாந்தின் காதலி ரியாவைத் தவிர, மேலும் சிலர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, அவர்களுக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate (ED)) ஏற்கனவே ஒரு வழக்கை பதிவு செய்திருந்தது. தடைசெய்யப்பட்ட மருந்துகள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து என்.சி.பி. டெல்லியில் இருக்கும் NCBயின் ஒரு குழு மும்பையில் இந்த வழக்கை விசாரிக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

போதை மருந்து மற்றும் மனோவியல் பொருட்கள் (Narcotic Drugs and Psychotropic Substance) சட்டத்தின் 20, 22, 27 மற்றும் 29 பிரிவுகளின் கீழ்  ரியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


ரியா சக்ரவர்த்தி அழித்த வாட்ஸ்அப் தகவல்கள் சுஷாந்தின் மரண வழக்கில் போதை மருந்து சதி இருப்பதை சுட்டிக்காட்டுகின்றன. தொழில்நுட்ப உதவியுடன் அழிக்கப்பட்ட தரவுகள் மீட்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில், ரியாவுக்கும் போதைப்பொருள் வியாபாரி கெளரவ் ஆர்யாவுக்கும் இடையிலான உரையாடல் என்பது குறிப்பிடத்தக்கது. 
சுஷாந்த் வழக்கில் ED விசாரணையில் வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றத்தில் போதைப்பொருள் குறித்து ரியா உரையாடல் குறித்த விவரங்கள் தெரிய வந்துள்ளன. ரியாவின் தொலைபேசியின் தரவை பகுப்பாய்வு செய்வதற்காக சிபிஐ குழுவும், அமலாக்க இயக்குநரகமும் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளது.


விசாரணையின் போது, ரியா மற்றும் அவரது குடும்பத்தினரின் தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகளை ED கைப்பற்றியது என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையில், "தனது வாழ்நாளில் ஒருபோதும் போதைப்பொருளை உட்கொள்ளவில்லை" என்று ரியாவின் வழக்கறிஞர் சதீஷ் மான்ஷிண்டே தெரிவித்தார். ரியா எந்த நேரத்திலும் ரத்த பரிசோதனைக்கு தயாராக இருப்பதாக அவர் மேலும் கூறினார்.


ஜூன் 14 அன்று மும்பையில் தனது வீட்டில்   சுஷாந்த் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மும்பை போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். இருப்பினும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பின்னர், இந்த வழக்கு சிபிஐவிடம் ஒப்படைக்கப்பட்டது.


ALSO READ | சுஷாந்த் தற்கொலை வழக்கு: ரியா சக்ரவர்த்தியிடம் இந்த கேள்விகளைக் கேட்குமா சிபிஐ குழு?