Sushant Singh Rajput Case: பண மோசடி வழக்கு பதிவு செய்த அமலாக்க இயக்குனரகம்
சுஷாந்தின் வங்கியில் இருந்த பணம் சட்டவிரோதமானதா, கறுப்புப் பணமா, அதை யாராவது எடுத்து வெள்ளையாக மாற்ற முயற்சி செய்துள்ளனரா என்ற கோணத்தில் அமலாக்கத்துறை விசாரிக்கும்.
மும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை (Sushant Singh Case) வழக்கில் கடந்த பல நாட்களாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த வழக்கில் சிபிஐ விசாரணை செய்ய முடியவில்லை என்றாலும், அமலாக்க இயக்குநரகம் (ED) வழக்கு பதிவு செய்துள்ளது. பட்னாவில் சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் அளித்த புகாரின் அடிப்படையில் அமலாக்க இயக்குநரகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது சுஷாந்த்தின் வங்கிக் கணக்கில் ரூ .17 கோடி இருந்ததாகவும், அதில் ரூ .15 கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது எனவும் அவரின் தந்தை புகார் அளித்திருந்தார்.
பணமோசடி வழக்கு (Money Laundering Case) போடுவதற்கு ஒரு நாள் முன்பு தான், சுஷாந்தின் தற்கொலை வழக்கில், கே.கே.சிங்கின் எஃப்.ஐ.ஆரின் நகலை அமலாக்க இயக்குநரகம் பட்னா போலீசாரிடம் கேட்டு வாங்கியது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சாத்தியமான விசாரணைகளை ED மேற்கொள்ள உள்ளது. அதன் விசாரணையில், சுஷாந்தின் பணம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதைக் கண்டுபிடிக்கும்.
ALSO READ | இறந்தும் இருக்கிறார் Sushant Singh: 2000 கோடி வசூல் செய்து அவர் படம் சாதனை!!
சுஷாந்தின் தந்தை நடிகை ரியா மீது குற்றம் சாட்டினார்
நடிகை ரியா (Rhea Chakraborty) தனது வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள 2019 மே மாதம் சுஷாந்துடன் நட்பை வளர்த்துக் கொண்டதாக சுஷாந்தின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். சுஷாந்தின் பணம் மற்றும் அவரது வங்கிக் கணக்குகளை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ED விரும்புகிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். சுஷாந்தின் வங்கியில் இருந்த பணம் சட்டவிரோதமானதா, அது கறுப்புப் பணமா, அதை யாராவது எடுத்து வெள்ளையாக மாற்ற முயற்சி செய்துள்ளனரா என்ற கோணத்தில் அமலாக்கத்துறை விசாரிக்கும்.
ALSO READ | ரியா சக்ரவர்த்திக்கு எதிராக சுஷாந்த் சிங் தந்தை பதிவு செய்த 5 முக்கிய FIRs இதுவே
தேவேந்திர ஃபட்னாவிஸ் கோரினார்
குறிப்பிடத்தக்க வகையில், சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் (Devendra Fadnavis) குறைந்தது அமலாக்க இயக்குநரகம் (ED) பண மோசடி கோணத்தில் இருந்து தனது விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று ட்வீட் செய்திருந்தார். சிபிஐ விசாரணை தொடர்பாக மக்கள் உணர்வை மாநில அரசு புறக்கணிக்கிறது எனவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
ALSO READ | Sushant Suicide Case: வைரலாகும் கங்கணாவின் அறிக்கை பற்றிய Whatsapp chat!!