சர்வதேச அளவில் பயங்கரவாதமும், அதற்கு பலியாவோர் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது என இஸ்லாமிய கூட்டமைப்பு மாநாட்டில் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தானின் எதிர்ப்பையும் மீறி இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (OIC) மாநாட்டில் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். மாநாட்டின் துவக்க விழாவில் அவர் "பயங்கரவாதமும் தீவிரவாதமும் வெவ்வேறு பெயர்களையும் அடையாளங்களையும் தாங்கி நிற்கின்றன, அது பல்வேறு காரணங்களைக் கொண்டுள்ளது. ஆனால், ஒவ்வொரு வழக்கிலும், அது மதத்தின் திசைவேகத்தால் வழிநடத்தப்படுகிறது. அதன் வெற்றிக்கு ஒரு தவறான வழிநடத்துகிறது" என்று அவர் கூறினார். 


மேலும், அவர் இந்த விழாவில் தொடர்ந்து பேசுகையில், நீண்ட பாரம்பரியத்தை கொண்ட, அமைதி, அறிவு சார்ந்த சமூகத்தை கொண்ட மண்ணில் இருந்து இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளேன். உலகின் பல்வேறு மதங்களைச் சேர்ந்த இந்த நாடு தற்போது உலகின் மிகப்பெரி பொருளாதார வலிமை கொண்ட நாடாக மாறி வருகிறது. ரூ. 18.5 கோடி முஸ்லிம்கள் உட்பட 130 கோடி மக்கின் வாழ்த்துக்களுடன் இங்கு வந்துள்ளேன். எங்கள் முஸ்லிம் சகோதரர்கள் பன்முகத்தன்மை கொண்டவர்கள். கடந்த 4 ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகம் மட்டுமல்லாமல், மேற்காசியாவின் வளைகுடா பகுதியுடன் எங்கள் உறவு, செயல்பாடுகள் அதிகரித்து வருகிறது. வரலாறு திரும்புகிறது. 


நமது நாடுகளில் பலவும் ஆங்கிலேயர்கள் ஆட்சியின் கருப்பு நாட்களை சந்தித்தவை. சுதந்திரத்துக்கு பிறகு ஒற்றுமை, நீதி, மரியாதை, வளம் கொண்ட நாடாக மாறிவருகிறோம். தீவிரவாதம் பல்வேறு பெயர்களில் வலம் வருகின்றன. தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் என்பது எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல. அனைத்து மதங்களுமே அமைதியை போதிக்கின்றன. இஸ்லாம் மதமும் அப்படி தான். கடவுள் என்பது ஒருவர் தான். ஆனால் பாதைகள் தான் வேறானவை.



இஸ்லாமிய கூட்டுறவுக் கூட்டமைப்பு மாநாட்டிற்கு இந்தியா அழைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநாட்டை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது!