ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றும் சுஷ்மா ஸ்வராஜ்!
பாக்கிஸ்தானை ’டெரரிஸ்தான்’ என இனி அழைக்கலாம் என ஐநா சபையினில் நேற்று கூறி பதிலடி கொடுத்த நிலையில் இன்று இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை(UNGA) வில் உரையாற்றுகிறார்.
சர்வதேச அமைப்புகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப் படுத்தும் ஸ்வராஜ் உரை, பாகிஸ்தானின் பயங்கரவாதம் மற்றும் காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக பாக்கிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்கும் வகையினில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா, ஐ.நா. பொதுச் சபையில் இணைந்த வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில் உரையாற்றுகையில் இக்கருத்துக்களை முன்வைக்கும் வகையினிலும், பயங்கரவாதத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் தனது கருத்தினை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
’பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா தீவிரமாக கண்டனம் செய்து வருகின்றது. பயங்கரவாத செயல்களுக்கும் எவ்வித நியாயமும் கூற முடியாது’ சுஷ்மா ஸ்வராஜ் கூறியது குறிப்பிடத்தக்கது.