சுஷ்மா சுவராஜ்: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுநீரக கோளாறு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுஷ்மா சுவராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது டயாலிசிஸ் நடந்து கொண்டுள்ளது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகின்றன. இறைவன் அருள்புரிய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் டிவிட் செய்துள்ளார். அவர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்.