வங்கிகடன் மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ள மெகுல் சோக்சியை சிறைபிடிக்க உதவுமாறு ஆண்டிகுவா வெளியுறவு அமைச்சர் சேட் கிரீனிடம், சுஸ்மாஸ்வராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திரா வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்தாதாக குஜராத்தை சேர்ந்த தொழில் அதிபர் நிதின் சந்தேசரா குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இவரது ஸ்டெர்லிங் பயோடெக் குழும நிறுவனங்களின் பெயரால் இந்த கடனை வாங்கிய இவர் திருப்பிச்செலுத்த வில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.


இந்த விவகாரம் தொடர்பாக சிபிஜ வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், நிதின் சந்தேசரா குடும்பத்துடன் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவுக்கு தப்பி ஓடி விட்டதாக தெரியவந்துள்ளது. ஆனால் கைதிகள் பரிமாற்றத்துக்கு ஆண்டிகுவா நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளவில்லை.



இந்நிலையில் நிதின் சந்தேசராவையும், அவரது குடும்பத்தினரையும் மீட்டுக்கொண்டு வர உதவுமாறு ஆண்டிகுவா வெளியுறவு அமைச்சர் சேட் கிரீனிடம், சுஸ்மாஸ்வராஜ் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளியுறுவு துறை அமைச்சக செய்திதொடர்பாளர் ரவீஸ் குமார் தெரிவித்துள்ளார்.