‘சர்வதேச சிந்தனையாளர்’ பட்டியலில் சுஷ்மா சுவராஜ்
2016-ம் ஆண்டுக்கான "சர்வதேச சிந்தனையாளர்" பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
இந்தியாவின் வெளியுறவு அமைச்சராக சுஷ்மா சுவராஜ் பதவியேற்ற கையோடு டுவிட்டரில் தனது துறை ரீதியான பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதுடன், அவர்களது கோரிக்கைகளை பரிசீலித்து, அதன் மீது உரிய நடவடிக்கையும் எடுக்கவும் உத்தரவிட்டார். எந்த பிரச்னையாக இருந்தாலும் அதன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாட்டவர்கள் அளிக்கும் கோரிக்கைகளையும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்து வருகிறார்.
தற்போது இவர் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்துக் கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வந்தாலும், தனது துறை ரீதியான பணிகள் தொய்வின்றி நடைபெறுவதற்கான நடவடிக்கைகளை அவர் டிவிட்டர் மூலம் செயல்படுத்தி வருகிறார்.
சுஷ்மா சுவராஜின் சேவையை பாராட்டி சர்வதேச நாளிதழான ‘ பாரீன் பாலிஸி ’ 2016-ம் ஆண்டுக்கான உலகளாவிய 15 சர்வதேச சிந்தனையாளர்களில் ஒருவராக தேர்வு செய்துள்ளது. மேலும் இப்பட்டியலில் அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், ஜெர்மன் சான்சிலர் ஏஞ்சலா மெர்கல், கனடா பிரதமர் ஜஸ்டின் உள்ளிட்ட 14 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இதற்காக சுஷ்மாவை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.