தூய்மை இந்தியா பட்டியல் 2017: 6வது இடத்தில் திருச்சி
கடந்த 2014-ம் ஆண்டு முதல் ‘தூய்மை இந்தியா’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த வருடம் தூய்மை குறித்து ஆய்வு 434 நகரங்களில், 37 லட்சம் பேரிடம் நடத்தப்பட்டது. அதன் முடிவை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வெளியிட்டார்.
இந்த பட்டியலில், முதலிடத்தில் மத்திய பிரதேச மாநிலம் இந்துார் உள்ளது. அதனை தொடர்ந்து போபால்(மத்திய பிரதேசம்), விசாகப்பட்டினம்(ஆந்திர பிரதேசம்), சூரத்(குஜராத்), மைசூரு(கர்நாடகம்), திருச்சி(தமிழ்நாடு), டெல்லி, நவிமும்பை(மகாராட்டிரா), திருப்பதி(ஆந்திர பிரதேசம்), வதோதரா(குஜராத்) ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
இப்போது வெளியிடப்பட்டு உள்ள பட்டியலில் 6-வது இடத்தை தமிழகத்தின் திருச்சி நகரம் பிடித்துள்ளது.
கடந்த வருடம் வெளியிட்டப்பட்ட பட்டியலில் திருச்சி 3-வது இடத்தை பிடித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.