திருவனந்தபுரம்: முதலமைச்சர் பினராயி விஜயன் (Pinarayi Vijayan) உட்பட கேரளாவின் (Kerala) உயர்மட்ட அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஸ்வப்னா சுரேஷ், அவரும் அவரது கும்பலும், 2019 நவம்பர் முதல் சுமார் 19 முறை தங்கத்தை கடத்தியதாக அமலாக்க இயக்குநரகத்திடம் (ED) தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ED க்கு அவர் அளித்த அறிக்கையில், அவர் ஸ்பேஸ் பார்க்கில் சேர்ந்த பின்னரே கடத்தலைத் தொடங்கினார் என்றும், அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் துணைத் தூதரகத்தில் பணிபுரிந்தபோது இப்படி எதுவும் செய்யவில்லை என்றும் கூறினார்.


அவர் அக்டோபர் 21, 2019 அன்று ஸ்பெஸ் பார்க்கில் சேர்ந்தார். அப்போதுதான் அவரது கடத்தல் கும்பல் மாதத்திற்கு இரண்டு முறை கடத்தல் சோதனைகளை மேற்கொள்ளத் தொடங்கியது. மெதுவாக, அவரது கும்பல் திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக நவம்பர் 2019 முதல் ஜூன் 2020 வரை சுமார் 19 முறை தங்கத்தை கடத்தியதாக ஒன்மனோராமாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ALSO READ: கேரளா தங்கக் கடத்தல் வழக்கு; NIA விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது!


அவர்கள் நவம்பர் மாதத்தில் நான்கு முறை, டிசம்பரில் 12 முறை, ஜனவரி, மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் தலா ஒரு முறை சட்டவிரோதமாக தங்கத்தைக் கடத்தியுள்ளனர். ஜூன் மாத இறுதியில் மீண்டும் கடத்த முயன்றபோது அவரும் அவரது கும்பலும் சுங்கத் துறையால் (Customs Department) கைது செய்யப்பட்டனர்.


அவரது அறிக்கையின்படி, அவரும் அவரது கும்பலும் டிசம்பரில் மட்டும் 36 கிலோகிராம் தங்கத்தை கடத்தியுள்ளனர்.


இதற்கிடையில், அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate) பதிவு செய்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷுக்கு (Swapna Suresh) எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. எனினும், இந்த விவகாரத்தில் தேசிய புலனாய்வு அமைப்பின் வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதால் அவர் தொடர்ந்து சிறையில் இருப்பார்.


திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் இந்த ஊழலை அடுத்து அதன் நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளது. ஆனால் COVID-19 தொற்றுநோயால்தான் தற்காலிகமாக பணிநிறுத்தம் ஏற்பட்டதாக பணியகம் கூறியுள்ளது.


கேரள அரசாங்கத்தின் ஸ்பேஸ் பார்க்கில் தனது நியமனம் முதலமைச்சருக்கு தெரிந்துதான் செய்யப்பட்டது என்று இந்த வார தொடக்கத்தில், ஸ்வப்னா சுரேஷ் ED இடம் கூறினார்.


“எனக்கு எம்.சிவசங்கரை மிகவும் நெருக்கமாகத் தெரியும். நான் தூதரக செயலாளராக இருந்த காலத்திலிருந்தே முதல்வர் பினராயி விஜயனுக்கும் என்னைத் தெரியும். நான் நம்பகமானவளாக இருந்ததால்தான் நான் முதலில் PWC க்கும் பின்னர் ஸ்பெஸ் பார்க் திட்டத்திற்கும் பரிந்துரைக்கப்பட்டேன் என நான் நினைக்கிறேன். ஸ்பேஸ் பார்க்கில் எனது நியமனம் முதலமைச்சருக்குத் தெரிந்துதான் நடந்தது” என்று அவர் கூறினார்.


ALSO READ: NIA: கேரள தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் கைது


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR