உணவு மற்றும் பிற வீட்டு உபயோக பொருட்களை டெலிவரி செய்யும் ஆன்லைன் தளமான ஸ்விக்கி வெள்ளிக்கிழமை தனது ஊழியர்களுக்கு  மகிழ்ச்சி அளிக்கும் வகையிலான அறிவிப்பை வெளியிட்டது. அதாவது அவர்கள் எங்கிருந்தும் வேலை செய்யலாம் அறிவித்தது. அதாவது, இனி ஸ்விக்கியின் ஊழியர்கள் தங்கள் வேலையை எங்கிருந்தும்  செய்யலாம். இது குறித்து அந்நிறுவனம் தகவல் அளித்துள்ளது. குழுவின் தேவைகள் மற்றும் பல மேலாளர்கள் மற்றும் ஊழியர்களின் கருத்துகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய கொள்கையின்படி, ஸ்விக்கி நிறுவனத்தில் கார்ப்பரேட், மத்திய வணிகச் செயல்பாடு மற்றும் தொழில்நுட்பக் குழுக்கள் தொலைதூரத்தில் பணிபுரிவதுடன், ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒருமுறை தங்களது  சொந்த ஊர் அல்லது இடங்களில் ஒரு வாரத்திற்கு ஒன்றிணைந்து தனிப்பட்ட முறையில் பிணைப்பை மேம்படுத்தும். இருப்பினும், முக்கிய பொறுப்பில், வாடிக்கையாளர் சேவைத் துறையில் உள்ள ஊழியர்கள் வாரத்தில் சில நாட்கள் தங்கள் சொந்த இடங்களிலிருந்து அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய வேண்டும்.


ஸ்விக்கி அளித்த தகவல்


Swiggy நிறுவனத்தின் HR தலைவர், கிரிஷ் மேனன் ஒரு அறிக்கையில், "எங்கள் முக்கிய நோக்கம் ஊழியர்களின் பணி வாழ்க்கையை சுலபமாக்குவதாகும். பணியாளர்கள், மேலாளர்கள் மற்றும் தலைவர்களின் விருப்பதை அறிந்து, ​​எங்கிருந்தும் பணியை மேற்கொள்ளலாம் என ஊழியர்களுக்கு ஒரு நிலையான ஆப்ஷனை அறிமுகப்படுத்த நாங்க முடிவு செய்தோம் என்றார். இதனால் அவர்களுக்கு ஓய்வு நேரமும் கிடைக்கும்.


மேலும் படிக்க: போன் தொலைந்துவிட்டால் GPay, PhonePe மற்றும் Paytm -ஐ பிளாக் செய்வது எப்படி?


பணியாளர் அனுபவம், வேலை தேவை மற்றும் பணியிட அனுபவம் ஆகியவற்றில் நாங்கள் தொடர்ந்து தீவிரமாக கவனம் செலுத்துவோம், இது உண்மையான தொலைதூர முதல் நிறுவனமாக மாற்றப்படும் என்று மேனன் கூறினார். தற்போது, ​​நாடு முழுவதும் உள்ள 27 மாநிலங்கள் மற்றும் நான்கு யூனியன் பிரதேசங்களில் உள்ள 487 நகரங்களில் Swigsters செயல்பட்டு வருகிறது. 2020 ஆம் ஆண்டு முதல், ஊழியர்களின் பணியின் தன்மையின் அடிப்படையில் ஒரு நெகிழ்வான வேலை மாதிரியில் பணிபுரியும் ஸ்டார்ட்அப் இடத்தில் உள்ள முதல் சில நிறுவனங்களில் Swiggy ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Flight Ticket Offer: வெறும் ரூ1499-ல் விமான பயணம், முந்துங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ