புதுடெல்லி: இரண்டு வெவ்வேறு பிராண்டுகளின் டெலிவரி நபர்களுக்கு இடையேயான நட்பு இணையத்தை இளக வைத்துள்ளதுள்ளது. இதை நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். கொளுத்தும் டெல்லி வெப்பத்தின் மத்தியில் சொமாட்டோ ஊழியருக்கு உதவும் ஸ்விக்கி ஊழியரின் வீடியோ இணையத்தில் இதயத்தை வென்று வருகிறது. சிலர் அதை “பிரோஸ் பீயிங் ப்ரோஸ்” என்றும் சிலர் “டிவைடட் பை கம்பனீஸ் யுனைடட் பை ப்ரொஃபெஷன்” அதாவது “நிறுவனங்களால் பிரிந்திருந்தாலும் தொழிலால் இணைந்துள்ளோம்” என்றும் கமெண்ட் செய்துள்ளனர். ஒரே தொழிலில் இருக்கும் போட்டி நிறுவனங்களின் ஊழியர்களுக்கு மத்தியில் இப்படி ஒரு இணைப்பு காண்பவர்களை கவர்ந்துள்ளது.
இந்த வீடியோ சனா அரோரா என்ற இன்ஸ்டாகிராம் பயனர் மூலம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், ஸ்விக்கி மற்றும் சோமாட்டோ டெலிவரி பாய்ஸ் இருவரும் ஒன்றாக சேர்ந்து அருகருகில் பயணம் செய்தை காண முடிகின்றது. ஸ்விக்கி ஊழியர் ஒரு மோட்டார் சைக்கிளிலும் சோமாட்டோ ஊழியர் ஒரு சைக்கிளிலும் செல்கிறார்கள். கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில், மோட்டார் சைக்கிளில் செல்லும் ஸ்விக்கி ஊழியர், சோமாட்டோ ஊழியரும் விரைவாக பயணிக்க, கூடுதல் உந்துதலை அளிக்க, அவரது கைகளை பிடித்து செல்வது காண்பவர்களை உருக வைக்கிறது. மோட்டார் சைக்கிளில் செல்லும் ஸ்விக்கி ஊழியர் செய்த உதவியால் இருவரும் ஒத்திசைவாக பயணம் செய்கிறார்கள்.
மேலும் படிக்க | டெலிவரி பாயை வலை வீசி தேடும் ‘ஸ்விக்கி’ : தகவல் கொடுத்தால் ரூ. 5,000 பரிசு!
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெகுவாக வைரல் ஆகி வருகிறது. இந்த நிகழ்வு ஆன்லைனில் பல பயனர்களால் பாராட்டப்பட்டது. இந்த கட்டுரையை எழுதும் நேரத்தில், இந்த வீடியோவுக்கு சுமார் 4,67,363 லைக்குகளும் 1,301 கமெண்டுகளும் கிடைத்துள்ளன.
நட்புக்கு ஏது எல்லை என எடுத்துக்காட்டிய ஸ்விக்கி சோமாட்டோ ஊழியர்களின் வீடியோ இதோ:
சில நாட்களுக்கு முன்பு மும்பை மழைக்கு மத்தியில் உணவு வழங்குவதற்காக ஒரு ஸ்விக்கி ஊழியர் குதிரையில் சவாரி செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. டெலிவரி பார்ட்னரைக் கண்டறிவதற்கான தேடலை ஸ்விக்கி தொடங்கியது. அவர் குறித்த தகவல்களை பெற உதவுமாறு ஸ்விக்கி தனது சமூக ஊடக கணக்குகள் மூலம் பொது மக்களை கேட்டுக்கொண்டது. தனது இன்ஸ்டாகிராம் பதிவில், கேலியும் கிண்டலுமாக, வீடியோவில் உள்ள நபரை அடையாளம் காணும் நெட்டிசன்கள் மற்றும் உணவு பிரியர்களுக்கு ஸ்விக்கி ரூ. 5,000 பரிசை அளிக்கும் என நிறுவனம் அறிவித்தது. இருப்பினும், குதிரையில் சென்று இணையத்தை கலக்கியது ஸ்விக்கி ஊழியர் அல்ல என்பது பின்னர் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து தற்போது ஸ்விக்கி சோமேட்டோ டெலிவரி ஊழியர்களுக்கு இடையிலான இந்த வீடியோ நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வெவ்வேறு போட்டி நிறுவனங்களுக்காக பணிபுரிந்தாலும், கொளுத்தும் வெயிலில் இருவரும் காட்டிக்கொள்ளும் உதவி மனப்பான்மையும், நட்பும் மனதில் சந்தோஷத்தையும், உதட்டில் புன்னைகையையும் வரவழைகின்றன.
மேலும் படிக்க | டெலிவரி பாயிலிருந்து IT இன்ஜினியர்: இணையத்தை கலக்கும் வெற்றிக் கதை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ