283 கோடி ரூபாய் மதிப்புள்ள நீரவ் மோடி, சகோதரி பூர்வி மோடியின் வங்கி கணக்கை சுவிஸ் அதிகாரிகள் முடக்கினர்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஞ்சாப் நேஷனல் வங்கியில் இந்திய வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் உட்பட ரூ.13,000 கோடி கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. ஆனால் மோசடி வெளியில் தெரியும் முன்னே நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர்கள் லண்டனுக்கு தப்பிச் சென்றனர். இந்த விவகாரம் தொடர்பாக இவர்களின் மேல் வழக்கு பதிவு செய்து சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள அவர்களது பல்வேறு சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில், 283 கோடி ரூபாய் மதிப்புள்ள நீரவ் மோடி, சகோதரி பூர்வி மோடியின் வங்கி கணக்கை சுவிஸ் அதிகாரிகள் முடக்கியுள்ளனர். நீரவ் மோடி மற்றும் அவரது சகோதரி பூர்வி மோடியின் 3,74,11,596 அமெரிக்க டாலர் மற்றும் GBP27,38,136 (RS 283.16 கோடி) இருப்பு தொகை வைத்திருக்கும் வங்கிக் கணக்குகளை சுவிஸ் அதிகாரிகள் முடக்கியுள்ளனர். 


தற்போது, தப்பி ஓடிய வைரவியாபரிக்கு சுவிட்சர்லாந்தில் நான்கு கணக்குகள் உள்ளன. PMLA சட்டத்தின் கீழ் ED-யின் கோரிக்கையைத் தொடர்ந்து சுவிஸ் அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர். PNB மற்றும் பிற வங்கிகளிடமிருந்து சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்ட பணத்தில் இருந்து இந்த வங்கிக் கணக்குகளில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குற்றத்தின் வருமானமாக வழங்கப்பட்டுள்ளது மற்றும் சுவிஸ் அதிகாரிகள் ED இன் கருத்துக்கு ஒப்புக் கொண்டுள்ளனர். 


இதை தொடர்ந்து, நீரவ் மோடி இன்று லண்டனில் ரிமாண்ட் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட உள்ளார். ரூ .12,000 கோடி PNB மோசடி வழக்கு தொடர்பாக மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட பின்னர் அவர் தற்போது இங்கிலாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுவரை அவர் நான்கு முறை ஜாமீன் பெற முயன்றார், ஆனால் ஒவ்வொன்றிலும் தோல்வியுற்றார். நாடு முழுவதும் நீரவ் மோடியின் சொத்துக்கள் PNB-யிலிருந்து மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்கும் முயற்சியில் இணைக்கப்பட்டுள்ளன.