பிரிவினைவாத தலைவர் கிலானியின் மருமகன் உள்பட 7 பேர் கைது - தேசிய புலனாய்வு பிரிவு

காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட பிரிவினைவாதிகளுக்கு பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களிடம் இருந்து பணம் வந்தது என்று தொடர்பாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகின.
இது தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு விசாரணையில் இறங்கியது. விசாரணை நடத்திய போது பாகிஸ்தான் பயங்கரவாதிகளிடம் இருந்து நிதி வசூலிப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து தீவிர விசாரணையில் இறங்கியது தேசிய புலனாய்வு பிரிவு. டெல்லி, அரியானா மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய புலனாய்வு பிரிவு சோதனையில் நடத்தியது. இந்த அதிரடி சோதனையில் பணம் பெற்றதற்கான ஆதாரங்கள் சிக்கியது.
இதனையடுத்து, காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர் கிலானியின் மருமகன் அல்தாப் அகமது ஷாக் உள்பட 7 பேரை தேசிய புலனாய்வு பிரிவு கைது செய்து உள்ளது.