நேதாஜி மரணத்தில் நீடிக்கும் மர்மம் தீருமா; விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள தைவான்..!!
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எங்கே போனார், அவருக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து தொடர்ந்து பல கேள்விகளுக்கு பதில் கிடைக்காத நிலையில் அவரது மரணத்தின் மர்மம் இன்றும் தீராமல் உள்ளது.
Taipei City: சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை நாடு இன்று நினைவு கூர்கிறது. இன்றைய தினம், அதாவது ஜனவரி 23 ஆம் தேதி, ஒடிசாவின் கட்டாக்கில் 1897 ஆம் ஆண்டு பிறந்தார். நேதாஜியின் மரணம் இன்றும் அனைவருக்கும் மர்மமாகவே உள்ளது. நேதாஜியின் மரணம் குறித்து மீண்டும் கேள்வி எழுப்பிய தைவான், அதை விசாரிக்குமாறு தனது தேசிய ஆவணக் காப்பகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
நேதாஜியின் மறைவு குறித்த செய்தியை வெளியிட்ட ஜப்பான்
நேதாஜியின் மரணத்திற்குப் பிறகு, ஜப்பானிய நிறுவனம் ஒன்று தைவானில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் விமானம் விபத்துக்குள்ளானதாகவும், அதனால் அவர் இறந்ததாகவும் செய்தி வெளியிட்டது. ஆனால் சில நாட்களுக்குப் பிறகு, ஜப்பானிய அரசு தைவானில் அன்று விமான விபத்து ஏதும் நடக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியது. விமான விபத்து என்ற ஒன்றே ஏற்படாத போது, நேதாஜி எங்கே போனார் என்ற சந்தேகத்தை இந்த செய்தி வலுப்படுத்தியது.
ALSO READ | நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மின் ஒளி சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!
காணாமல் போன நேதாஜியின் விமானம்
இருப்பினும், இந்திய ஆவணங்கள், சுபாஷ் சந்திர போஸ் 1945 ஆகஸ்ட் 18 அன்று விமான விபத்தில் இறந்தார் எனக் கூறுகின்றன. சுபாஷ் சந்திரபோஸ் விமானத்தில் பயணித்த நிலையில், வழியில் காணாமல் போனார் என கூறப்பட்டது. அவரது விமானம் காணாமல் போன நிலையில், விமானம் விபத்துக்குள்ளானதா என பல கேள்விகளை எழுப்பியது. சுபாஷ் சந்திரபோஸின் மரணம் விபத்தா அல்லது கொலையா? 1940-களில் ஜப்பான் ஆக்கிரமித்திருந்த தைவான் நாட்டில் தான் நேதாஜியை கடைசியாக உயிருடன் பார்க்கப்பட்டார் எனக் கூறலம். 1945 ஆம் ஆண்டில் தைவானில் ஒரு விபத்தில் அவர் இறந்தார் என்பது பொதுவான ஒருமித்த கருத்து.
ALSO READ | குடியரசு தின கொண்டாட்டம் இனி ஜனவரி 23ம் தேதியில் தொடங்கும்: மத்திய அரசு அறிவிப்பு
சுபாஷ் சந்திரபோஸ் மரணதில் மர்மம் நீடிப்பதன் காரணம்
சுபாஷ் சந்திர போஸின் மரணம் ஒரு மர்மமாகவே உள்ளது. ஏனெனில் அந்த நேரத்தில் போஸின் குடும்பத்தை ஜவஹர்லால் நேரு உளவு பார்த்ததாகக் புகார் கூறப்பட்டது. இந்த பிரச்சினையில் உளவுத் துறையில் இரண்டு கோப்புகள் அம்பலமாகியதை அடுத்து, சர்ச்சை எழுந்தது. சுதந்திர இந்தியாவில் சுமார் இரண்டு தசாப்தங்களாக நேதாஜியின் குடும்பத்தை உளவுத் துறை IB உளவு பார்த்ததாக கோப்புக்கள் கூறின. சுபாஷ் சந்திரபோஸின் மரணத்தில் நேருவுக்கும் சந்தேகம் இருப்பதாகவும், அதனால் தான் அந்த நடவடிக்கை எனவும் பல எழுத்தாளர்கள் வாதிட்டனர்.
ALSO READ | 75 ஆண்டுகளில் முதன்முறையாக குடியரசு தின அணிவகுப்பு 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்கும்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR