குடியரசு தினத்தன்று தலைநகர் தில்லியில், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின அணிவகுப்பு காலை 10 மணிக்கு தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு காலை 10.30 மணிக்கு தொடங்கும் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
75 ஆண்டுகளில் முதன்முறையாக, குடியரசு தின அணிவகுப்பு வழக்கமான நேரமான, காலை 10 மணிக்கு தொடங்காது. கோவிட்-19 கட்டுப்பாடுகள் மற்றும் ஜம்மு காஷ்மீர் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு மரியாதை செலுத்துவதன் காரணமாக குடியரசு தின விழா தாமதமாக தொடங்க உள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
ALSO READ | தடுப்பூசி இயக்கத்தில் பங்காற்றிய அனைவரையும் வணங்குகிறேன்: பிரதமர் மோடி
கோவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகள் காரணமாக தாமதம் ஏற்படுவதாகவும், அணிவகுப்பு தொடங்கும் முன், ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்த பாதுகாப்புப் பணியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
"இந்த அணிவகுப்பு விழா கடந்த ஆண்டைப் போலவே 90 நிமிடங்கள் நீடிக்கும், பிரதமர் நரேந்திர மோடி இந்தியா கேட் (India Gate) அருகே உள்ள தேசிய போர் நினைவகத்தில் அஞ்சலி செலுத்துவார். பின்னர், அணிவகுப்புகள் தொடங்கும். கலாச்சார பன்முகத்தன்மை, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை பிரதிபலிக்கும் அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தப்படும்." என்று அவர் மேலும் கூறினார்.
ALSO READ | தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டது குறித்து பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
அலங்கார ஊர்திகள் செங்கோட்டை வரை செல்லும் என்றும், பொதுமக்கள் காட்சிக்காக அங்கு நிறுத்தப்படும் என்றும். ஆனால் அணிவகுப்பு குழுக்கள் தேசிய மைதானம் வரை மட்டும் செல்வார்கள் என அவர் மேலும், கூறினார்.
கோவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகள் காரணமாக, குடியரசு தினத்தன்று கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கலைஞர்கள் யாரையும் சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் சுத்திகரிக்கப்பட்ட வாகனங்களில் பயணம் செய்வார்கள் என்பதோடு, தொற்று ஏற்படாமல் இருக்க தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
பணியின் போது உயிரிழந்த ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
ALSO READ | இந்தியா உலகின் 3வது பெரிய மருந்து உற்பத்தியாளராக உள்ளது: பிரதமர் மோடி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR