Taj Mahal பெயர் ராம் மஹால் என்று மாற்றப்படுமா? காரணம்!
உலகப் புகழ் பெற்ற ‘தாஜ்மஹால்’ நினைவுச்சின்னத்தின் பெயர் ராம் மஹால் என்று மாற்றம் செய்யப்படும் என பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் கூறுகிறார்.
உலகப் புகழ் பெற்ற ‘தாஜ்மஹால்’ நினைவுச்சின்னத்தின் பெயர் ராம் மஹால் என்று மாற்றம் செய்யப்படும் என பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் கூறுகிறார்.
முதலில் தாஜ்மஹால் ஒரு சிவன் கோயிலாக இருந்தது. எனவே, இது உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் ராம் மஹால் என்று பெயர் மாற்றப்படும் என்று மாநில எம்.எல்.ஏ கூறுகிறார்.
உத்தரபிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் உள்ள பைரியா தொகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read | #RIPSPJananathan பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்
சனிக்கிழமையன்று ஊடகங்களிடம் பேசிய சிங், ஆக்ராவின் தாஜ்மஹால், ஒருகாலத்தில் சிவபெருமானின் ஆலயமாக இருந்தது என்கிறார். சிவாஜியின் வழித்தோன்றல் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சிங் பாராட்டுகிறார்.
"சிவாஜியின் வழித்தோன்றல்கள் உத்தரபிரதேச தேசத்திற்கு வந்துள்ளனர். சமர்த் குரு ராம்தாஸ் சிவாஜியை இந்தியாவுக்குக் கொடுத்தது போலவே, கோரக்நாத் ஜி, யோகி ஆதித்யநாத்தை உத்தரபிரதேசத்திற்கு வழங்கியுள்ளார்" என்று சிங் கூறினார்.
Also Read | தமிழ்நாடு தேர்தல் 2021: திமுக எம்.எல்.ஏ டாக்டர் பி. சரவணன் பிஜேபியில் இணைந்தார்
மொராதாபாத்தில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுவதை பாஜக எம்.எல்.ஏ கடுமையாக கண்டனம் தெரிவித்தார்.
சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் 20 கட்சித் தொண்டர்கள் மீது சனிக்கிழமை (மார்ச் 13) ஊடகவியலாளர்களைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அவர்களில் சிலருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டன.
இந்த சம்பவம் பத்திரிகையாளர்கள் மீது வன்முறையை பிரயோகிக்கும் பயன்படுத்தும் சமாஜ்வாடிஸின் உண்மையான தன்மையைக் காட்டுகிறது என்று சிங் கூறினார். "ஆனால் யோகி ஜி ஆட்சியின் கீழ் இது பொறுத்துக் கொள்ளப்படாது" என்று சிங் மேலும் கூறினார்.
"தேச விரோத மனப்பான்மை" கொண்டவர்களுக்கு எந்த முன்னுரிமையும் வழங்கப்பட மாட்டாது என்று அவர் கூறினார். "இந்தியாவின் பெருமையையும் இந்தியத்தன்மையையும் பேசுபவர்கள் மட்டுமே இந்நாட்டின் தலைவர்களாக மாறுவார்கள்" என்று அவர் கூறினார்.
தைரியமான கருத்துக்களுக்காக அறியப்பட்ட பாஜக தலைவர், இதுபோன்ற சர்ச்சைக்குரிய பேச்சுக்களை முன்வைப்பது ஒன்றும் புதிதல்ல.
Also Read | தங்கத்தின் விலை எவ்வளவு குறைந்தது?
கடந்த ஆண்டு, ஹத்ராஸில் ஒரு சிறுமி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிறகு, சிறுமிகளுக்கு ’கலாசாரத்தை’ கற்பித்தால் கற்பழிப்பு நிறுத்தப்படலாம் என்று அவர் கூறியிருந்தது மிகப் பெரிய சர்ச்சைகளை எழுப்பியது.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR