Tamil Nadu Election 2021 Live: அமமுக அணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள்

எதிர்வரும் தமிழக தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. நேற்றுக் காலை 11 மணி முதல் வேட்புமனு தாக்கல் (Nominations) தொடங்குயது. வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாள் (Last Date for Nomination) மார்ச் 19. தினசரி பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். மார்ச் 20ஆம் தேதியன்று வேட்புமனு பரிசீலனை செய்யப்படும். வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை திரும்பப் பெற்றுக் கொள்ள மார்ச் 22 கடைசி நாள்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 14, 2021, 08:28 PM IST
Live Blog

Tamil Nadu Assembly Elections 2021: எதிர்வரும் தமிழக தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் திமுகவின் எம்.எல்.ஏவான டாக்டர் பி. சரவணன் பா.ஜ.கவில் இணைந்தார். அவர் சென்னையில் பாஜக தலைவர் முருகனின் தலைமையில் பாஜகவில் இணைந்தார்.

6 ஆண்டுகளுக்கு முன்பு பாஜக உறுப்பினராக இருந்த டாக்டர் பி சரவணன் மீண்டும் பிரதமர் மோடியின் தலைமையில் இணைந்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சொல்கிறார். கொரோனா தடுப்பூசி நாட்டிற்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் அனுப்பப்படுவது  எவராலும் மறுக்க முடியாத தலைமையின் சாதனை என்று டாக்டர் பி சரவணன் தெரிவித்துள்ளார்.

14 March, 2021

  • 20:45 PM

    நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் இருந்து வானதி சீனிவாசனை பாஜக களம் இறக்குகிறது. எதிர்வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலுக்கான 20 வேட்பாளர்களின் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி அறிவித்தது.  

  • 20:30 PM

    ஆயிரம் விளக்குகள் தொகுதியில் பாஜக வேட்பாளராக திருமதி குஷ்பு சுந்தர் அறிவிக்கப்பட்டுள்ளார். தனக்கு தொகுதி ஒதுக்கீடு செய்த கட்சித் தலைமைக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட குஷ்பூ, இந்த தொகுதியை ஒதுக்கீடு செய்த மத்திய மற்றும் மாநில தலைவர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன் ... ஒரு பெண்ணின் உத்தரவுகளை திமுக மற்றும் காங்கிரஸால் ஏற்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். எத்தனை பெண் வேட்பாளர்களுக்கு இந்த இரண்டு கட்சியும் தொகுதி ஒதுக்கியுள்ளன என்ற கேள்வியையும் குஷ்பு எழுப்பினார்.

  • 20:15 PM

    அமமுக அணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

  • 13:00 PM

    திமுக தேர்தல் அறிக்கை: 

    நீட் தேர்வை ரத்து செய்ய முதல் சட்டசபை கூட்டத் தொடரில் சட்டம் கொண்டுவரப்படும்.

    மருத்துவ படிப்புகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும்.

    8 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப்பாடமாக்கப்படும்

    மேலும் விபரங்கள் இங்கே...

  • 12:45 PM

    திமுக தேர்தல் அறிக்கை: 

    தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.

    அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்கள் அரசு பணியாளராக நியக்கப்படுவார்கள்.

    தமிழக தொழில்நிறுவனங்களில் 75%  வேலைவாய்ப்பு தமிழருக்கு வழங்க சட்டம் இயற்றப்படும்.

    பயிற்சி முடித்துள்ள 205 அர்ச்சகர்களுக்கு உடனடியாக பணி நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    அரசு பணியில் உள்ள பெண்களுக்கு பேறுகால விடுப்பு 12 மாதமாக அதிகரிக்கப்படும்.

  • 12:45 PM

    திமுக தேர்தல் அறிக்கை:

    ஒரு லிட்டருக்கு பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் குறைக்கப்படும்

    அதேபோல ஒரு எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 100 மானியம் வழங்கப்படும்.

    ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைக்கப்படும்.

  • 12:45 PM

    திமுக அறிக்கை அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின்  வெளியிட்டு வருகிறார்.

    திமுக தேர்தல் அறிக்கை

    பொங்கல் பண்டிகை தமிழர் பண்பாட்டு திருநாளாக கொண்டாடப்படும். 

    திருக்குறள் தேசிய நூலாக்க அறிவிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவோம். 

    சென்னையில் திராவிடர் இயக்க தீரர் கோட்டம் உருவாக்கப்படும்.

    அதிமுக அமைச்சர்கள் மீதான புகாரை விசாரிக்க தனி நீதிமன்றம்

    சட்டசபை நிகழ்ச்சிகள் டிவியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.

  • 11:00 AM

    இன்னும் சற்று நேரத்தகல் திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்:

    திமுக தேர்தல் அறிக்கையுடன் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் மரியாதை.

     

  • 10:15 AM

    தமிழக சட்டமன்றத் தேர்தல்: பாஜக இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிடக்கூடும்

    வரவிருக்கும் தமிழகத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் பெயர்களை பாரதிய ஜனதா கட்சி இன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்த வரை, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இம்முறை தமிழகத்தில் அவர்களது இருப்பும் ஆதரவும் செல்வாக்கும் அதிகரித்துள்ளது என்பது அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது. சமீக காலங்களில் பல முக்கிய புள்ளிகளும், திரைத் துறை பிரமுகர்களும் பாஜக-வில் சேர்ந்ததை நாம் பார்த்தோம். தேசியக் கட்சியாக இருப்பதால், இக்கட்சியின் முக்கிய ஆளுமைகள் தேசியத் தலைவர்களாகவே இருந்து வந்தனர். எனினும், இந்த தேர்தல்களில் அந்த நிலை மாறி, தமிழகத்தின் பல பிரபலங்களின் மூலம் பாஜக தன்னை அடையாளப்படுத்தியுள்ளது. மேலும் விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

  • 09:15 AM

    எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த முகாம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள், இணையதளத்தில் இருந்து மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    இதன்படி சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2021-ன் போது வாக்காளர் பட்டியலில் முதன் முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் இந்த முகாமினைப் பயன்படுத்தி தங்களது மின்னணு வாக்காளர் அடையாள அட்டையினை தங்களது செல்போன்/ கணினியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

  • 07:30 AM

    மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்துள்ள சமத்துவ மக்கள் கட்சி 40 தொகுதிகள் கொண்ட வேட்பாளர் பட்டியலை கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் நேற்று வெளியிட்டார். இந்திய ஜனநாயகக் கட்சி (ஐஜேகே) 20 தொகுதிகள் கொண்ட பட்டியலை வெளியிட்டது.

Trending News