உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலில் (Taj Mahal) கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் வருகைக்கு தடை உள்ளது. விரைவில் நிலைமை சரியாகி, இந்த காதல் சின்னம் திறக்கப்படும் என்று மக்கள் நினைத்துக்கொண்டிருக்கையில், ஆக்ராவில் (Agra) தற்போதைய கோவிட்-19 (Covid-19) நிலையைக் கருத்தில் கொண்டு, தற்போதைக்கு இந்த வரலாற்று சிறப்புமிக்க நினைவு சின்னத்தை (Monument) திறக்க வேண்டாம் என அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஆக்ராவில் உள்ள ஃபதேபுர் சிக்ரி, இத்மாத்-உத்-தௌலா, ஆக்ரா கோட்டை போன்ற பிற நினைவுச்சின்னங்களும் மூடியே இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தாஜ் மஹால், தாஜ்கஞ் காவல் நிலைய எல்லைக்குள் வருவதாகவும், அப்பகுதி தற்போது கட்டுப்பாடு மண்டலமாக உள்ளதாகவும் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. ஃபதேபுர் சிக்ரி, இத்மாத்-உத்-டௌலா, ஆக்ரா கோட்டை ஆகியவையும் பஃபர் மண்டலங்களில் உள்ளன. இவை திறக்கப்பட்டால், கோவிட்-19 இன்னும் அதிகமாக பரவுவதற்கான அபாயம் ஏற்படலாம் என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


’இப்போதைக்கு ஆக்ராவில் உள்ள நினைவுச்சின்னங்கள் திறக்கப்படாது என சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் முடிவெடுக்கப்பட்டுள்ளது’ என அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஜூலை 5 நிலவரப்படி, ஆக்ராவில் மொத்தம் 71 கோவிட்-19 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன.


கடந்த 4 நாட்களில் ஆக்ராவில் புதிதாக 55 கொரோனா நோயாளிகள் பற்றி தெரிய வந்துள்ளது. சனிக்கிழமை மட்டும் 15 கொரோனா நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.


ஜூலை 4 வெளியான நகரின் சுகாதார செய்திக்குறிப்பின் படி, 139 பேர் சிகிச்சையில் உள்ளனர். இங்கு கொரோனா தொற்றின் மொத்த எண்ணிக்கை 1282 ஆக உள்ளது.


இதற்கிடையில், உத்திர பிரதேசத்தில் (UP) நோயாளிகளின் எண்ணிக்கை 8161 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1155 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 785 ஆக அதிகரித்துள்ளது.


முன்னதாக, கலாச்சாரம் மற்றும் சுகாதாரத் துறைக்கான மத்திய அமைச்சர் ப்ரஹ்லாத் சிங் படேல், ஜூலை 6 முதல் இந்த நினைவுச்சின்னங்கள் பொது மக்கள் பார்வைக்கு திறக்கப்படும் என அறிவித்திருந்தார்.


“அனைத்து நினைவுச்சின்னங்களும் சுத்திகரிக்கப்பட்டு, தனிமனித இடைவெளியும் சுகாதார வழிமுறைகளும் பராபரிக்கப்படும்” என அவர் கூறியிருந்தார்.


எனினும், தற்போது அதிகரித்து வரும் தொற்றின் எண்ணிக்கை காரணமாக இந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.


ALSO READ: அடுத்த ஒரு வருடத்திற்கு மாஸ்க், சமூக இடைவெளி கட்டாயம் - அரசு அதிரடி உத்தரவு..!