மொதல்ல சொன்னதை செய்யுங்க... இந்தியா சீனாவுக்கு எச்சரிக்கை..!!!
கடந்த வாரம் இந்தியா-சீனா எல்லை விவகாரங்களில் ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பிற்கான (WMCC) 18 வது கூட்டம் நடைபெற்றது. அதில் கிழக்கு லடாக்கில் படைகளை விலக்கிக் கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
புதுடில்லி: கால்வான் பள்ளத்தாக்கு சம்பவம் நடந்து இரண்டு மாதங்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில், எல்லைகளை படைகளை விலக்கிக் கொள்ள, இரு நாடுகளும் பரஸ்பரம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வியாழக்கிழமை கூறியுள்ளது. அதே நேரத்தில் எல் ஏ சி பகுதியில் உள்ள துருப்புக்கள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன என்று சீனா தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா தனது வாராந்திர பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசிய போது, "இரு தரப்பிலும் முழுமையாக படைகளை விலக்கிக் கொள்வது என்பது, எல்ஏசி பகுதியில் வழக்கமாக துருப்புகள் எந்த நிலையில் இருக்குமோ, அந்த நிலைக்கு திரும்ப வேண்டும்" என்று மீண்டும் வலியுறுத்தினார். "இது பரஸ்பர ஒப்புக்கொள்ளப்பட்ட நடைமுறைகளின் மூலம் மட்டுமே சாத்தியம் என்றும், இரு தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்." எனவும் கூறினார்
கடந்த வாரம் இந்தியா-சீனா எல்லை விவகாரங்களில் ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பிற்கான (WMCC) 18 வது கூட்டம் நடைபெற்றது. அதில் கிழக்கு லடாக்கில் படைகளை விலக்கிக் கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ராஜீய நிலையில் மட்டுமல்ல, இராணுவ மட்டத்திலும் இரு தரப்பினரும் தொடர்பு கொண்டு உள்ளனர்.
இதற்கிடையில், சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மூத்த அதிகாரி வு கியான், முன்னணியில் உள்ள சீன துருப்புகள் விலக்கைக் கொள்ளப்பட்டுள்ளன என்றும், அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் பேணுவது இருதரப்பைனருக்கும் நல்லது என்பதோடு, பிராந்தியம் மற்றும் உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு முக்கியம் எனவும் தெரிவித்தார்.
ஆனால், இந்திய தரப்பில், சீனா சொல்வதை போல் செயல்படவில்லை என்றும், சீனப் படைகள் பங்கோங் ஏரியின் ஃபிங்கர் 5 முதல் ஃபிங்கர் 8 பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன என கூறப்பட்டது.
வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சமீபத்தில் ஒரு நேர்காணலில், எந்தவொரு தீர்வும் ஏற்பட "அனைத்து ஒப்பந்தங்களையும் புரிந்துணர்வுகளையும் மதிக்க வேண்டும் என்பதையும், ஒருதலைப்பட்சமாக நிலைமையை மாற்ற முயற்சிக்கக்கூடாது என்பது முக்கியம்" என்றார்
ALSO READ | Kim Jong Un: என்ன தான் நடக்கிறது மர்ம தேசமான வடகொரியாவில்..!!!