Kim Jong Un: என்ன தான் நடக்கிறது மர்ம தேசமான வடகொரியாவில்..!!!

வட கொரியா எப்போதுமே ஒரு மர்ம தேசம் தான். வட கொரியாவில் போடப்பட்டிருக்கும் இருப்பு திரைக்கு உள்ளே என்ன நடக்கிறது என்பதை அறிவது மிக மிக கடினம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 27, 2020, 07:35 PM IST
  • கிம் ஜாங் உன்னிற்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையில், அவர் உடல் நிலை மேசமடைந்ததாகவும், அவர் கோமாவில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.
  • அதன் பின்னர், அவர் உரத்தொழிற்சாலை ஒன்றின் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக செய்தி வெளியானது.
  • வடகொரியாவில் உணவு பற்றாக்குறை நிலவுவதால், அனைவரும் தங்கள் செல்லமாக வளர்க்கும் நாய்களை உணவிற்காக இறைச்சிக் கூடத்தில் ஒப்படைக்க வேண்டும் என, குலை நடுங்க வைக்கும் உத்தரவை அவர் பிறப்பித்தார்.
Kim Jong Un: என்ன தான் நடக்கிறது மர்ம தேசமான வடகொரியாவில்..!!! title=

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல் நிலை குறித்து பல மாதங்களாக பல்வேறு செய்திகள் வந்த வண்ணமாக உள்ளது.

வட கொரியா ஒரு மர்ம தேசம். வட கொரியாவில் போடப்பட்டிருக்கும் இருப்பு திரைக்கு உள்ளே என்ன நடக்கிறது என்பதை அறிவது மிக மிக கடினம்.

வடகொரியா தொடர்பாக பல கேள்விகள் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. அவருக்கு உண்மையிலேயே உடல் நலன் சரியில்லையா? கோவிட்-19 பிரச்சனை நாட்டில் அதிகமாக உள்ளதா? அந்நாடு தீவிரமான பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளதா? உள்நாட்டு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதா?  1940 ஆம் ஆண்டு முதல் தஙக்ள் குடும்பம் தலைமுறை தலைமுறையாக  ஆட்சி செய்ய உதவியாக இருந்த  அந்த அச்சுறுத்தும் தந்திரத்தை கிம் ஜாங் உன்னும் கடைபிடிக்கிறாரா?

கிம் ஜாங் உன்னிற்கு உடல் நல குறைவு இருப்பதாக சில மாதங்களுக்கு முன் வந்த செய்தியை அடுத்து பல்வேறு விதமான ஊகங்களும் வதந்திகளும் பரவின. முதலில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது எனவும் அதில் அவர் உடல் நிலை மேசமானது எனவும் செய்திகள் வந்தன.  அவர் கோமா நிலையில் இருப்பதாக கூட கூறப்பட்டது.

ஆனால் சில நாட்களுக்கு பின், அவர் உரத்தொழிற்சாலை ஒன்றின் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக செய்தி வெளியானது. ஆனால், அந்த புகைப்படங்களின் நம்பகத்தன்மை குறித்து பலர் கேள்வி எழுப்பினர்.

அவர் இறந்து விட்டதாக ஜப்பான் கூட கூறியது.

அப்போது தான் கிம் ஜாங்-உன்(Kim Jong-un) உயிருடன் இல்லை என பரப்பபட்டு வந்த  வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் வட கொரிய அதிபர் Kim Jong-un தனது தாத்தா கிம் இல் சுங்கின் (Kim Il Sung ) 26 வது நினைவு தினத்தில் கலந்து கொண்டார். 

பல்வேறு விதமான உறுதிபடுத்தப்படாத செய்திகள் உலவி வரும் வேளையில், வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன், சில நாட்களுக்கு முன் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டார்.

வடகொரியாவில் உணவு பற்றாக்குறை நிலவுவதால், அனைவரும் தங்கள் செல்லமாக வளர்க்கும் நாய்களை உணவிற்காக இறைச்சிக் கூடத்தில் ஒப்படைக்க வேண்டும் என, குலை நடுங்க வைக்கும் உத்தரவை பிறப்பித்தார்.

ALSO READ | சாப்பிட வழியில்ல, செல்லப்பிராணிய தாங்க; குலை நடுங்க வைக்கும் கொரிய அதிபர் உத்தரவு

இந்நிலையில், சில நாட்களுக்கு, Kim Jong Un சகோதரி, கிம் யோ ஜாங்கிற்கு ( Kim Yo-Jong)  கூடுதல் அதிகாரம் வழங்கியிருப்பது பல விதமான சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

இந்த கூடுதல் அதிகாரத்தை பெற்றிருப்பதன் மூலம், கிம் ஜாங் உன்னிற்கு அடுத்த நிலையில் அவரது சகோதரி உள்ளார்.

ALSO READ | கோமாவில் வட கொரிய அதிபர் கிம், சகோதரிக்கு அதிகாரம்: தென் கொரிய அதிகாரியின் பகீர் தகவல்!!

நாட்டில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், அதை கையாள, கிம் யோ-ஜாங்கிற்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக, வட கொரியா கூறியுள்ளது. ஆனால், அமெரிக்கா மற்றும் தென் கொரியா தொடர்பான விவகாரங்களை கையாள 32 வயதான கிம் யோ-ஜாங்கிற்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக, தென் கொரியாவின் உளவுத்துறை தெரிவித்துள்ளது.

எந்தவொரு வட கொரியத் தலைவரும், தான் ஆட்சி செய்ய முடியாத அளவுக்கு நோய்வாய்ப்பட்டிருந்தாலோ அல்லது ஆட்சி மாற்றத்தின் மூலம் அகற்றப்பட்டாலோதான் தனது அதிகாரத்தை வேறொரு நபரிடம் ஒப்படைப்பார் என வட கொரிய அரசியலை நன்றாக அறிந்த தென் கொரிய வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

எது எப்படியோ, வட கொரியா தேசம் தற்போது ஒரு மர்ம தேசமாகவே உள்ளது. கிம் ஜாங் உன் உயிருடன் இருக்கிறா இல்லையா, அந்நாட்டில் என்ன தான் நடக்கிறது என்பதை அறிய உலகம் ஆவலாக இருக்கிறது. தென் கொரிய வல்லுநர்கள் கூறுவது உண்மையா என்பதற்கு காலம் தான் பதிலளிக்க வேண்டும்.

Trending News