தமிழக மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் -இந்திய வானிலை மையம்!
தமிழக கடலோர பகுதிகளில் இன்று மற்றும் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்!
தமிழக கடலோர பகுதிகளில் இன்று மற்றும் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்!
தென் மேற்கு பருவமழை மேற்கு இந்திய பகுதிகளில் மீண்டும் வலுப்பெற்று வருகிறது.
கேராளா மற்றும் கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் கனமழை நேற்று காலை முதல் குறைந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பில் தெரிவித்திருந்தது. இதனிடையே இன்று காலை வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில் தற்போது பெய்து வரும் மழையின் வலு இழக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
தற்போது பெய்து வரும் மழையில் வலு குறைந்தாலும், பருவமழை காலங்களில் வலுப்பெறும் மேற்கு திசை காற்றின் காரணமாக வருகின்ற 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை மீண்டும் மழை வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழக கடலோர பகுதிகளில் இன்று மற்றும் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.