நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் பேச்சு!!
புதுடெல்லி ராஷ்டிரபதி பவனில் நிதி ஆயோக்கின் 3வது ஆட்சிமன்ற குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடியது.
அப்போது அந்த நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
* விவசாயிகள் நியாயமான கோரிக்கையை மத்திய அரசு கருணையுடன் பரிசீலனை செய்ய வேண்டும்.
* காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்.
* 5 ஆண்டு திட்டத்தை ரத்து செய்யும் மத்திய அரசு முடிவை வரவேற்கிறேன்.
* மருத்துவ, பொறியியல் படிப்புகளுக்கு பொது நுழைவு தேர்வை கட்டாயமாக்கக்கூடாது.
* நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்.
நாட்டின் வளர்ச்சியில் அனைத்து மாநிலங்களுக்கும் பங்கு உள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் இழப்பீட்டில் ஒரே அளவீட்டை நிர்ணயம் செய்ய கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
நிதி ஆயோக்கின் தலைமை அங்கம் ஆன இந்த குழு பிரதமர் தலைமையில் அனைத்து முதல் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களை உள்ளடக்கியது.