அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்காக பிரதமர் நரேந்திர மோடியை குற்றம் சாட்டினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரு மாநிலங்களிலும் பாரதீய ஜனதா ஆட்சியின் செயல்பாட்டு விதத்தின் மூலம் பிரதமர் மோடி மக்கள் மத்தியில் தனது புகழை இழந்து வருகிறார் என்பது தெளிவாகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
இதுகுறித்து தனியார் ஊடக நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர் தெரிவிக்கையில்., 'ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவில் நடந்த சட்டமன்றத் தேர்தல்கள் நரேந்திர மோடி அரசு வரும் தேர்தல்களில் வெல்ல முடியாதது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் பிரதமர் மோடியைத் தாக்கி, இப்போது மோடி பிரபலமடைந்து வருவதாக ஒரு பிம்பம் உள்ளது, இனி அது சோபிக்காது. ஒவ்வொரு முறையும் மக்களை உணர்ச்சிவசமாக முட்டாளாக்கும் வேலையை அவரால் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்.


இது தவிர, இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் முன்பை விட சிறப்பாக செயல்பட்டது என்றும், கட்சியில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால், அடுத்த முறை காங்கிரசுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


நடந்து முடிந்த இரு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சியில் உள்ள ஒரு கட்சிக்கு மாநிலத்தில் தனி பெரும்பான்மை கிடைக்காமல் இருப்பது, அக்கட்சி தொண்டர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாஜக-வின் பின்னடைவிற்கு பிரதமர் மோடியே காரணம் என அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகோய் தெரிவித்துள்ளது, நாட்டு மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.