தெலுங்கனா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நியமனம் சட்டவிரோதமானது என குறிப்பிட்டதற்கு, முதல்வர் சந்திரசேகர ராவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என தெலுங்கனா பாஜக தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹைதராபாத்: ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நியமனம் சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டு, தெலுங்கனா முதல்வரின் முதல் மக்கள் தொடர்பு அதிகாரி (CPRO), ஆங்கில இதழ் ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளார். மத்திய அரசை குற்றம்சாட்டும் விதமாக இந்த கட்டுரை இருப்பதாக கூறி பாஜக தெலுங்கனா பிரிவு திங்கள்கிழமை மாநில அரசை வார்த்தைகளால் தாக்கியது.


மேலும் இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.


இதுகுறித்து பாஜக தெலுங்கனா பிரிவு செய்தி தொடர்பாளர் கிருஷ்ணாசகர் ராவ் தெரிவிக்கையில்., "தெலுங்கனா புதிதாக நியமிக்கப்பட்ட தெலுங்கனா ஆளுநர் மீது முன்வைக்கப்பட்ட அபிலாஷைகளை பாஜக கண்டிக்கிறது, இது தெலுங்கனா அரசாங்கத்திற்கு தகுதியற்றது. அவர் அரசியலமைப்புத் தலைவராக (மாநில ஆளுநராக) பதவியேற்பதற்கு முன்பு அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ளார்" தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் குறிப்பிடுகையில் "இது ஒரு வெட்கக்கேடான அவமானமாக நாங்கள் கருதுகிறோம், தெலுங்கனா முதல்வர் கே சந்திரசேகர் ராவ் மாநில ஆளுநரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.


"ஒரு மூத்த பத்திரிகையாளர் சுயாதீனமாக இவ்வாறான கட்டுரையை எழுதுகிறார் என்றாலோ, அல்லது ஒரு மாநில அரசாங்கத்துடன் இணைக்கப்படவில்லை என்றாலோ நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒரு மாநில அரசின் சம்பளத்தை பெறும் ஒரு மூத்த மாநில அரசு அதிகாரி எவ்வாறு, இப்படி வெளிப்படையாக எழுத முடியும். இந்த தவறான செயலைச் செய்த அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் கிருஷ்ணாசகர் ராவ் குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி தெலுங்கானாவின் இரண்டாவது ஆளுநராக எம்.எஸ்.சவுந்தரராஜன் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.