பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் பங்கேற்கமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிதி ஆயோக் அமைப்பின் ஐந்தாவது ஆட்சிமன்றக் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள், ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


முன்னதாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருந்தார். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதில் பலனில்லை எனவும் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


நீர்பாசன திட்டங்களை தெலங்கானாவில் செயல்படுத்தும் பணிகள் இருப்பதால் அவர் கலந்து கொள்ள மாட்டார் என தெலங்கானா மாநில அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


மேலும், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.