ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தற்போது புதிய வீட்டடிற்கு மாறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெலுங்கான மாநிலம் பேகம்பேட்டில் ஒரு லட்சம் சதுர அடியில் அரண்மனை போன்று கட்டப்பட்டுள்ள அவரது புதிய வீட்டில் உள்ள அனைத்து ஜன்னல்களும் குண்டு துளைக்காத கண்ணாடிகளால் பொருத்தப்பட்டுள்ளன.


3 பிளாக்குகளுடன் கூடிய புதிய பங்களாவில் 1000 பேர் அமரக்கூடிய அரங்கம் கட்டப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் அலுவலகமும் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளது.


இந்த வீட்டில் குளியலறைகளில் பல லட்சம் மதிப்புள்ள குண்டு துளைக்காத கண்ணாடிகளை பொருத்தி உள்ளனர். மேலும் ஜன்னல், கதவுகள், குண்டு துளைக்காத வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது.


முதலமைச்சரின் அதிகாரபூர்வ வீடாக இது மாற இருப்பதால், இந்த வீட்டிற்கு பாதுகாப்பு அவசியம் என்று மாநில போலீஸ் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


ஆடம்பர பங்களா கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததால் இன்று காலை 5.22 மணிக்கு சந்திர சேகரராவ் குடும்பத்துடன் குடியேறினார்.


இந்த வீட்டு வளாகங்கள் மும்பையை சேர்ந்த ஷபூர்ஜி பல்லோஞ்சியால் கட்டப்பட்டது.