ஐதராபாத்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், அரசுப் பணத்தில் திருப்பதி ஏழுமலை கோயிலுக்கு ரூ.5.6 கோடி அளவிற்கு தங்க, வைர நகைகளை காணிக்கை செலுத்தி உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல்வர் சந்திரசேகர ராவ், தனது குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள் சிலருடன் திருப்பதி ஏழுமலை கோயிலுக்கு சென்றார். அங்கு 19 கிலோ எடையுள்ள ரூ.5.6 கோடி அளவிலான தங்க மற்றும் வைர நகைகளை காணிக்கையாக அளித்தார். 


தெலுங்கானா மாநிலத்தின் 7 மாவட்டங்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதுவரை 2500 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் அரசு பணத்தில் , மாநில முதல்வர் கோயிலுக்கு காணிக்கை செலுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.