மகாராஷ்டிரா, தெலுங்கானா, பஞ்சாப், மேற்கு வங்காளம் ஊரடங்கு நீட்டிக்க கோரிக்கை
ஊரடங்கு உத்தரவு மார்ச் 25 அன்று அமல்படுத்தப்பட்டது. முதலில் ஏப்ரல் 14 அன்று முடிவடையும் என்று கருதப்பட்டது. பின்னர் அது மே 3 வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் மே 17 வரை நீட்டிக்கப்பட்டது.
புது டெல்லி: பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுடனான பிரதமரின் ஐந்தாவது வீடியோ மாநாட்டில், குறைந்தது ஐந்து மாநிலங்களாவது தற்போதைய ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்க வலியுறுத்தினர். ஆனாலும் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசம் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதை விட, சில கட்டுப்பாடுகளுடன் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அதிக தளர்வு வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
ஊரடங்கு நீட்டிப்பு கோரிய மாநிலங்களில் தெலுங்கானா, மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்களாம் ஆகியவை அடங்கும்.
மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தற்போதைய ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் மாநிலத்தின் முயற்சிகளை பெரிதும் பாதிக்கும் என்று கூறினார். கோவிட் -19 தொற்று மூலம் நாட்டில் 22,000 க்கும் மேற்பட்ட பாதிப்புடன் மகாராஷ்டிரா மாநிலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மீது உக்கிரமான மனநிலையில் இருப்பதாக கூறப்பட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் நீட்டிப்புக்கு ஆதரவு அளித்தார். மகாராஷ்டிராவிலிருந்து பல புலம்பெயர்ந்தோர் வீடு திரும்பிய பின்னர் பஞ்சாப் மாநிலத்திலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் சரியான பொருளாதார வலுவூட்டல் கொள்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும் மாநில அரசுக்கு இருக்கும் கடன்களில் குறைந்தது 33 சதவீதத்தை பூர்த்தி செய்ய நிதி உதவியையும் பிரதமர் மோடியிடம் கோரினார்.
ரயில்வே சேவைகள் மீண்டும் தொடங்குவது குறித்து தெலுங்கான மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முதலமைச்சர்கள் ஆட்சேபனைகளை எழுப்பினார்கள். முதலமைச்சர்கள் கே. சந்திரசேகர் ராவ் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும், ஊரடங்கு மூலம் சரிசெய்யப்பட்ட அனைத்து ஆதாயங்களையும் பயனற்றதாககி விடும், ரயில்வே சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான "நேரம்" இன்னும் வரவில்லை என்றும் கூறினர்.
நேற்று இரவு, மே 12 முதல், ரயில் சேவைகளை மறுதொடக்கம் செய்வதாக மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில் ஊரடங்கு உத்தரவை தளர்த்த வேண்டும் எனவும் மற்ற மாநிலத்தவர்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களில் ஒருவர் ஆந்திரா முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி. அவர் விதிகளை தளர்த்த விரும்பியது மட்டுமல்லாமல், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் கோரினார். இருப்பினும், கோவிட் -19 உடன் போராட ஆந்திராவுக்கு உடனடியாக ரூ .16,000 கோடி தேவை என்று அவர் கூறினார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசிய தலைநகரில் பொருளாதார நடவடிக்கைகளை உறுதிசெய்யுமாறு பிரதமரிடம் கூறினார்.
ஊரடங்கு உத்தரவு மார்ச் 25 அன்று அமல்படுத்தப்பட்டது. முதலில் ஏப்ரல் 14 அன்று முடிவடையும் என்று கருதப்பட்டது. பின்னர் அது மே 3 வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் மே 17 வரை நீட்டிக்கப்பட்டது.