அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்ப இருந்த இந்தியர் சுட்டுக் கொலை..!
தெலுங்கானாவைச் சேர்ந்த 61 வயது தணிக்கையாளர் ஒருவர், அமெரிக்காவில் 16 வயது கார் திருடனால் சுட்டுக் கொல்லப்பட்டார்!
தெலுங்கானாவைச் சேர்ந்த 61 வயது தணிக்கையாளர் ஒருவர், அமெரிக்காவில் 16 வயது கார் திருடனால் சுட்டுக் கொல்லப்பட்டார்!
தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தைச் சேர்ந்த சுனில் எட்லா என்பவர், நியூ ஜெர்சியில் உள்ள வெண்ட்னர் (ventnor) நகரத்தில் குடும்பத்துடன் தங்கி தணிக்கையாளராகப் பணிபுரிந்து வந்தார். தனது தாயின் 95 ஆவது பிறந்தநாளைக் கொண்டாட தாயகம் திரும்பவிருந்த நிலையில், நவம்பர் 15 ஆம் தேதி அன்று 16 வயது கார் திருடனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நவம்பர் 15 ஆம் தேதி, சுனில் அவரது அபார்ட்மென்டுக்கு வெளியே குண்டடிகளுடன் கிடந்துள்ளார். சுனில் குறித்து தகவல் அறிந்த போலீஸ், சம்பவ இடத்துக்கு வந்துள்ளது. ஆனால், காவலர்கள் வரும் முன்னரே சுனில் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
சுனிலை சுட்டுக் கொன்று விட்டு, அந்த சிறுவன் காரைத் திருடிச் சென்றது போலீஸ் விசாரணையில் தற்போது தெரிய வந்துள்ளது. அந்தச் சிறுவன் கைது செய்யப்பட்டான். தந்தையை விட்டு விட்டு காரை மட்டும் திருடிச் சென்றிருக்கலாமே என்று சுனிலின் மகன் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.