கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பூங்கோடு பகுதியில், அகில இந்திய கால்பந்து போட்டியின் இறுதி போட்டி நடக்க இருந்தது. இதற்காக அந்த மைதானத்தில் தற்காலிகமாக மூங்கில் மற்றும் மரப்பலகைகளாலான கேலரி அமைக்கப்பட்டிருந்தது. இங்கு ஏராளமான பார்வையாளர்கள் ஆவலுடன் போட்டியை காண காத்திருந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது, எதிர்பாராத விதமாக  போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அந்த தற்காலிக கேலரி சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் அங்கிருந்த பார்வையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.உடனடியாக அங்கு சென்ற காவலர்கள் மற்றும் சக பார்வையாளர்கள் விபத்தில் சிக்கி கிடந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் உயர் அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, எதிர்பாரா விதமாக பார்வையாளர்களின் வருகை அதிகரித்ததால் இதுபோன்ற அசம்பாவிதம் நடந்ததாக தெரிய வந்துள்ளது. சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கேலரி சரிந்து விழும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது. 


மேலும் படிக்க | இந்தியாவின் இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கு சச்சின் தேவுக்கும் விரைவில் திருமணம்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR