குஜராத் சாலை விபத்து; சம்பவயிடத்தில் 10 பேர் பலி!
![குஜராத் சாலை விபத்து; சம்பவயிடத்தில் 10 பேர் பலி! குஜராத் சாலை விபத்து; சம்பவயிடத்தில் 10 பேர் பலி!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2018/12/31/139047-accident234.jpg?itok=TalooKKL)
குஜராத் மாநிலம் குட்சு மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்!
குஜராத் மாநிலம் குட்சு மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்!
பச்சாவு நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில், உப்பு ஏற்றிச்சென்ற ட்ரைலர் வாகனம் ஒன்று நிலைதடுமாறி தடம் மாறி சென்றது, அதே வேலையில் இந்த வாகனத்தின் பின் வந்த வாகனமும் இந்த விபத்தில் சிக்கியது.
இதன் காரணாமாக இரண்டு வாகனங்களில் இருந்த நபர்களும் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர். கிடைக்கப்பெற்ற தகவலின்படி ட்ரைலர் வாகனத்தில் மட்டும் 11 பயணித்ததாக தெரிகிறது.
இந்த கோர விபத்தில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்களை அருகில் இருந்து மருத்துவமனைக்கு அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் பலியானவர்கள் பச்சாவு பகுதியில் இருந்து பூஜ் பகுதிக்கு சென்றதாக தெரிகிறது.
இச்சம்பவம் குறித்து தகவல்கள் அறிந்த அம்மாநில முதல்வர் விஜய் ரூப்பானி, விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார்.