மோடி உரையாற்றிய கூட்டத்தில் விபத்து, 70 பேர் படுகாயம்!
மேற்குவங்கத்தில் விவசாயிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றிக் கொண்டிருந்தபோது சாமியானா பந்தல் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த அசம்பாவிதத்தில் 70 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மேற்குவங்கத்தில் விவசாயிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றிக் கொண்டிருந்தபோது சாமியானா பந்தல் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த அசம்பாவிதத்தில் 70 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மத்தியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக பிரதமர் மோடி பிரட்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இன்று மேற்குவங்கம் சென்ற பிரதமர் மோடிக்கு திரிணாமுல் காங்கிரசின் சார்பில் கருப்புக்கொடி காட்டப்பட்டது.
இதை தொடர்ந்து, கிசான் கல்யான் பேரணியில் விவசாயிகளுடன் பிரதமர் மோடி உரையாற்றினார். பிரதமர் உரையாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் கூட்டத்துக்கு வந்திருந்தர்கள் மீது சாமியானா பந்தல் சரிந்து விழுந்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் சிதறி ஓடிய நிலையில் நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்தார்கள். இதுவரை 70-க்கு மேற்ப்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் 13 பெண்களும் உள்ளனர்.
மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்தவர்களுக்கு பிரதமர் மோடி நேரில் ஆறுதல் கூறினார்.
அதிகாரிகளின் தகவலின் படி, பிரதமர் மோடி தன் உரையினை பாதி முடித்திருந்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அப்போது உடனடியாக தன் பின் இருந்து காவலரை அழைத்து பாதிக்கப்பட்ட பொதுமக்களை சென்று கவனிக்குமாறு தெரிவித்துள்ளார்!