காஷ்மீரில் 12 இடங்களில் என்ஐஏ சோதனை!
கடந்த ஜூன் மாதம் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் தீவிரவாத செயல்களை ஊக்குவிப்பதற்காக பாகிஸ்தானிலிருந்து நிதி பெற்றதாக புகார் எழுந்த நிலையில் தலைநகர் டெல்லி மற்றும் காஷ்மீரில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனையில் ஈடுபட்டது.
இந்த சோதனையில் காஷ்மீரில் 14 இடங்களிலும் டெல்லியில் 8 இடங்களில் நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், தீவிரவாத செயல்களுக்கு நிதி பெறப்படுவதாக எழுப்படட்ட புகார் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு காஷ்மீரில் இன்று மீண்டும் சோதனை நடத்தியது.
இது தொடர்பாக மத்திய அரசின் அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த சோதனை ஸ்ரீநகர், பாரமுல்லா மற்றும் ஹந்த்வாரா மாவட்டங்களைச் சேர்ந்த 12 இடங்களில் நடத்தப்பட்டது. கடந்த ஜூலை 24-ம் தேதி இந்த வழக்கு தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’ தெரிவித்தனர்.