பயங்கரவாத சதியை முறியடித்த டெல்லி போலிஸ்: Encounter-ல் 5 பேர் கைது
தில்லியில் ஒரு மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதலை நடத்த பயங்கரவாத குழுக்கள் திட்டமிட்டு வருவதாக உளவுத் துறைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சில நாட்களாகவே தில்லியில் கடும் உஷார் நிலை இருந்து வருகிறது.
புதுடெல்லி: நாட்டின் தலைநகரில் நடக்கவிருந்த் ஒரு பெரிய பயங்கரவாத தக்குதல், தில்லி போலிஸ் எடுத்த அதிரடி நடவடிக்கையால் தடுக்கப்பட்டுள்ளது. புதுடெல்லியின் ஷாகர்பூர் பகுதியிலிருந்து குறைந்தது ஐந்து பயங்கரவாதிகளை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு திங்கள்கிழமை (டிசம்பர் 7) கைது செய்தது.
கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் எந்த இயக்கத்தை சார்ந்தவர்கள் என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று பயங்கரவாதிகள் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள், மற்ற இருவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
சிறப்புப் படை அதிகாரிகளுடன் நடந்த துப்பாக்கிச் சூடுக்குப் பின்னர் பயங்கரவாதிகள் (Terrorist) கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயுதங்கள் மற்றும் பொது மக்களுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய பிற பொருட்கள் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.
டெல்லி காவல்துறையின் (Delhi Police) ஒரு சிறப்புக் குழு ஒரு பெரிய பயங்கரவாத சதித்திட்டத்தை முறியடித்து, தேசிய தலைநகரின் கான் மார்க்கெட் பகுதியில் இருந்து இரண்டு ஜெய்ஷ்-இ-முகமது (Jaish-e-Mohammed) பயங்கரவாதிகளை கைது செய்த கிட்டத்தட்ட 20 நாட்களுக்குப் பிறகு, தற்போது இந்த 5 பயங்கரவாதிகள் பிடிக்கப்பட்டுள்ளனர். அப்போது பிடிக்கப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து இரண்டு செமி தானியங்கி கைத்துப்பாக்கிகள் மற்றும் 10 இயக்க நிலை தோட்டாக்களை போலீசார் மீட்டது நினைவிருக்கலாம்.
ALSO READ: கனடா தலைமையிலான கூட்டத்தை புறக்கணிக்க இந்தியா முடிவு
தில்லியில் ஒரு மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலை நடத்த பயங்கரவாத குழுக்கள் திட்டமிட்டு வருவதாக உளவுத் துறைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சில நாட்களாகவே தில்லியில் கடும் உஷார் நிலை இருந்து வருகிறது. பல்வேறு போராட்டங்களும் தில்லியில் நடந்து வரும் நிலையில், போராட்டக்காரர்களின் போர்வையில் பயங்கரவாதிகள் சதித்திட்டங்களை நிறைவேற்றக்கூடும் என்ற அச்சத்தையும் பாதுகாப்பு நிறுவனங்கள் (Security Agencies) வெளிப்படுத்தி வந்துள்ளன.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் கான் மார்க்கெட்டில் சில பயங்கரவாதிகள் பிடிபட்டதும், இன்று ஐந்து பேர் ஆயுதங்களுடன் பிடிபட்டதும், உளவுத் துறைக்கு கிடைத்த தகவல்களை ஊர்ஜிதப்படுத்தியுள்ளன.
இந்நிலையில், இன்று பிடிபட்ட பயங்கரவாதிகள் எந்த இயக்கத்தை சார்ந்தவர்கள் என்பது குறித்தும், இவர்களுக்கும், சில நாட்களுக்கு முன்னர் டெல்லியின் (Delhi) கான் மார்க்கெட்டில் பிடிபட்ட பயங்கரவாதிகளுக்கும் தொடட்பு உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
ALSO READ: Farmers Protest: MSP தொடரும் என எழுதி கொடுக்க தயார் - வேளாண் இணை அமைச்சர்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR