பயங்கரவாதி வானியை ஹீரோவாக சித்தரிக்கும் மீடியாக்கள் :மோடி கவலை
காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி புர்கான் வானி மீடியாக்களில் ஹீரோ போல் சித்தரிக்கப்படுவது குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். காஷ்மீர் கலவரம் குறித்து பிரதமர் மோடி நேற்று மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு, நாட்டின் அமைதிக்கு எதிராக செயல்பட்ட ஒருவரை மீடியாக்கள் ஹீரோ போல் சித்தரிப்பது தவறானது என பிரதமர் மோடி கவலை தெரிவித்ததாகவும், இது அவரது ஆதரவாளர்களை கலவரத்தை அதிகமாக தூண்டிவிட வழிவகுக்கும் எனவும் பிரதமர் கூறியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களில் காஷ்மீரில், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் கலவரத்தை தூண்ட முயற்சிப்பார்கள் என உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.