புது தில்லி: புதன்கிழமை  மாநிலங்கள் அவையில் ஜம்மு காஷ்மீர் குறித்து உள்துறை அமைச்சகம் பகிர்ந்து கொண்ட தரவுகள், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதச் சம்பவங்கள் குறைந்து வருவதைக் காட்டுகிறது. 2018 ஆம் ஆண்டில் 417  என்ற அளவில் இருந்த பயங்கரவாத சம்பவங்கள், 2021 ஆம் ஆண்டில் 229  குறைந்துள்ளது. கிட்டத்தட்ட 50 சதவீதம் என்ற அளவில் பயங்கரவாத சம்பவங்கள் குறைந்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மாநிலங்கள் அவையில் தரவுகளை சமர்பித்தார். அதில், "பயங்கரவாதத்திற்கு எதிராக மத்திய அரசு பூஜ்ஜிய அளவிலான சகிப்புத்தன்மை கொள்கையைக் கொண்டுள்ளது என்றும், 2018 ஆம் ஆண்டில் 417  என்ற அளவில் இருந்த பயங்கரவாத சம்பவங்கள், 2019 ஆம் ஆண்டில் 255 ஆகவும், 2020ஆம் ஆண்ட்ல் 244 ஆகவும் 2021 ஆம் ஆண்டில் 229 என்ற அளவிலும்  குறைந்துள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க |  மத்திய அரசு 22 யூடியூப் சேனல்கள், 3 ட்விட்டர் கணக்குகளை முடக்கியுள்ளது


மே 2014 முதல் ஆகஸ்ட் 2019 வரை 177  சிவிலியன்கள் மற்றும் 406 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதை ஒப்பிடுகையில், ஆகஸ்ட் 5, 2019 மற்றும் நவம்பர் 2021 க்கு இடையில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 87 சிவிலியன்கள் மற்றும் 99 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதைக் காட்டும் தரவுகளையும் அமைச்சர் சமர்பித்தார்.


உள்துறை இணை அமைச்சர் ராய் மேலும் கூறுகையில், எந்தவொரு தீவிரவாத தாக்குதலையும் தடுக்க வலுவான வகையில் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும், இரவும் பகலும் மேற்கொள்ளும் ரோந்து பணிகள் மற்றும் சோதனைகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.


ஆகஸ்ட் 2019 முதல் நவம்பர் 2021 வரையிலான காலகட்டத்தில் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சிவிலியன்கள்  மற்றும் பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை குறித்த கேள்விக்கு அமைச்சர் இந்த பதிலை அளித்தார்.


மேலும் படிக்க | பெட்ரோல் டீசல் விலை குறையுமா; நிதி அமைச்சர் கூறுவது என்ன..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR