பெட்ரோல் டீசல் விலை குறையுமா; நிதி அமைச்சர் கூறுவது என்ன..!!

நாட்டில் பெட்ரோல்-டீசல் விலை தினம் தினம் அதிகரித்து வருகிறது. இன்றும் பெட்ரோல், டீசல் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் 80 காசுகள் உயர்த்தியுள்ளன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 5, 2022, 11:42 AM IST
  • ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக இந்தியா உறுதியான நிலைப்பாடு.
  • விரைவில் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறையலாம்.
  • ஐரோப்பாவின் பல நாடுகள் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கியுள்ளன.
பெட்ரோல் டீசல் விலை குறையுமா; நிதி அமைச்சர் கூறுவது என்ன..!! title=

நாட்டில் பெட்ரோல் - டீசல் விலை தினம் தினம் அதிகரித்து வருகிறது. இன்றும் பெட்ரோல், டீசல் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் 80 காசுகள் உயர்த்தியுள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு மீதான கோபம் மக்கள் மத்தியில் வேகமாக அதிகரித்து வருகிறது. 

பெட்ரோல்-டீசல் விலைகள் 

ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளதே காரணம் என கூறப்படுகிறது.  அதே நேரத்தில், ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக இந்தியா உறுதியான நிலைப்பாடு  எடுத்துள்ளதுடன், மலிவான விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதே இந்தியாவின் முன்னுரிமை எனவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

மலிவு விலையில் கச்சா எண்ணெய்

விரைவில் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறையலாம் என நிதியமைச்சரின் அறிக்கை மூலம் ஊகிக்கப்படுகிறது. உண்மையில், ரஷ்யா-உக்ரைன் போருக்கு இடையே, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டிற்கு தள்ளுபடியில் எரிபொருள் தேவை என்று தெளிவுபடுத்தியுள்ளார். ரஷ்யாவின் சலுகையால், இந்தியா மலிவான எண்ணெயை வாங்கத் தொடங்கியுள்ளது. மேலும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெயை வாங்கும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | PNG விலை உயர்வு, இல்லத்தரசிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்

ஐரோப்பாவின் பல நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கியுள்ளன

ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது குறித்து நிதியமைச்சர், " எரிசக்தி பாதுகாப்பு மற்றும் எனது நாட்டின் நலன்களுக்கு  மட்டுமே முதலிடம் கொடுக்கப்படும். சலுகை விலையில் சப்ளை கிடைத்தால், அதை ஏன் வாங்கக்கூடாது?"  என வினவியுள்ளார். உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யாவை எதிர்த்து வரும் ஐரோப்பிய நாடுகள், ஒரு மாதத்திற்கு முன்பு இருந்ததை விட ரஷ்யாவிடம் இருந்து கூடுதலாக 15% எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கியுள்ளதாக அவர் கூறினார். நாம் ஏன் வாங்கக்கூடாது? ரஷ்ய எண்ணெய் வாங்க ஆரம்பித்த நிலையில்,  3 முதல் 4 நாட்களுக்கான எண்ணெய் வாங்கப்பட்டுள்ளது என்றார்.

வரும் நாட்களில் ரஷ்யாவிடம் இருந்து மலிவான கச்சா எண்ணெயை இந்தியா தொடர்ந்து வாங்க முடியும் என்பது இந்தியாவுக்கு சாதகமான சூழ்நிலையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், இதன் மூலம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைவது மட்டுமின்றி, பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் அரசுக்கு உதவியாக இருக்கும்.

எண்ணெய் நிறுவனங்கள்

இனி வரும் நாட்களில் மலிவு விலை எண்ணெயால் நிறுவனங்களின்  வருமானமும் மேம்படும் என்ற நிதி அமைச்சரின் இந்தக் கூற்றின் அர்த்தம் இப்போது வெளிப்படுகிறது. இது தவிர கலால் வரி மற்றும் வாட் வரியிலும் மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் அளிக்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மீண்டும் ஒருமுறை விண்ணைத் தொடும் பெட்ரோல், டீசல் விலைகள் கட்டுக்குள் வரலாம். குறிப்பிடத்தக்க வகையில், இந்தியா தனது எண்ணெய் நுகர்வில் 85 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது, இது சர்வதேச சந்தையின் காரணமாக நிலையற்றதாக உள்ளது.

மேலும் படிக்க | வீட்டு உபயோகத்திற்கான எல்பிஜி சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்தது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News