பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில்,  தேசிய புலானய்வு முகமை, பல அல்கைதா பயங்கரவாதிகளை கைது செய்தது.  கேரளா மற்றும் மேற்கு வங்காளத்திலிருந்து 9 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்
தேசிய புலனாய்வு முகமை மேற்கு வங்கத்தில் எட்டு பேரையும், கேரளாவில் மூன்று பேரையும் கைது செய்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சில காலமாக  மாநில அளவில் இந்த பயங்கரவாதிகள் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள முக்கியமான இடங்களில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த இவர்கள்  திட்டமிட்டிருந்தனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.



பாகிஸ்தானின் நிதியுதவியுடன் அல்கொய்தாவுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் ஒரு குழுவை பிடிக்க கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் நடந்த சோதனைகளைத் தொடர்ந்து சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) கைது செய்துள்ளது.


இந்த நிறுவனம் மேற்கு வங்கத்தில் எட்டு பேரையும், கேரளாவில் மூன்று பேரையும் கைது செய்தது. மேலும் சில டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் ஆவணங்களை கைப்பற்றியது.


தேசிய தலைநகர் உட்பட இந்தியாவில் பல இடங்களில் தாக்குதல்களை நடத்துவதற்காக இவர்கள் திட்டமிட்டிருந்தனர். பாகிஸ்தானை தளமாக கொண்ட அல்கைதா பயங்கரவாதிகள், சமூக ஊடகங்கள் மூலம்,  இவர்களை மூளை சலவை செய்துள்ளனர். இவர்களை இந்தியாவின் பல முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தவும் தூண்டியது முதற்கட்ட விசாரணையின் போது கண்டறியப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.


இந்த குழுவினர் தீவிரமாக நிதி திரட்டிக் கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வாங்க முயற்சிக்க புதுடெல்லிக்கு செல்ல திட்டமிட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும் படிக்க | இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் சதி UNGA கூட்டத்தில் அம்பலம்..!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR