ராஜ்யசபா தலைவராக தவர்சந்த் கெலாட் நியமிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவராக மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜ்யசபா தலைவராக 71-வயது ஆகும் தவர்சந்த் கெலாட் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தவர்சந்த் கெலாட் நான்கு முறை மக்களவை உறுப்பினராக இருந்தவர். கடந்த 2012-ஆம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் தற்போது மீண்டும் மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்ய சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இவரது பதவிகாலம் வரும் 2022-ஆம் ஆண்டு முடிவடைகிறது.


இந்நிலையில் துணை தலைவர் பதவிக்கு, மோடி அரசின் நம்பிக்கை வாய்ந்தவராக கருதப்படும் பியூஷ் கோயல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரயில்வே அமைச்சராகவும், வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் உள்ள பியூஷ் கோயல் ராஜ்யசபா துணை தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ராஜ்யசபா உறுப்பினர் ஆகும். இவர் பாஜக-வின் தேசிய பொருளாளராகவும் இருந்தவர். 


இரண்டு முறை ராஜ்யசபா உறுப்பினராக இருந்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ராஜ்யசபா தலைவர் அல்லது துணை தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரவிசங்கர் பிரசாத் தற்போது மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் துணைத் தலைவர் வாய்ப்பு பியூஷ் கோயலுக்கு வழங்கப்பட்டுள்ளது.


மேலும் நாடாளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டார். துணை தலைவராக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இதர நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளளனர் என்பது குறிப்பிடத்தக்கது.