ஜம்மு: பானிஹாலி துணை ராணுவ படையின் மீதான தாக்குதலில் தொடப்புடைய மூன்றாவது பயங்கரவாதி பிடிப்பட்டான்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பானிஹாலில் உள்ள சஷாஸ்ட் சீமா பால் முகாமில் அண்மையில் நடந்த தாக்குதலுக்கு பின்னால் இருக்கும் மூன்றாவது பயங்கரவாதியை ஜம்மு-காஷ்மீர் போலீசார் கைது செய்துள்ளனர்.


ANI அறிக்கையின் படி, கைது செய்யப்பட்ட பயங்கரவாதி அக்விப் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் அனந்த்நாக் மாவட்டத்தில் கன்னாபலில் உள்ள அரசு பட்டப்படிப்பு பயின்று வரும் மாணவர் எனவும் தெரியவந்துள்ளது.


 



 


சீனாவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.


முன்னதாக கடந்த செப் - 22 ஆம் தேதி இதே சம்பவத்தில் தொடர்புடைய ஆரிப் மற்றும் கசான்பர் எனும் இரண்டு பயங்கரவாதிகள் பிடிப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது!