சமூக ஊடகத்தில் சர்ச்சைக்குரிய பதிவு தொடர்பான வழக்கில், வழங்கப்பட்ட ஜாமீன் உத்தரவில், மனுதாரர் சமூக ஊடகத்தை பயன்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையில் ஜாமீன் வழங்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு (UP Chief Minister Yogi Adityanath) எதிராக சமூக ஊடக தளங்களில் ஆட்சேபகரமான கருத்துக்களை தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது


உத்திர பிரதேச (Uttar pradesh) முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்ட வழக்கில், 2 வருடம் சமூக ஊடகத்தை பயன்படுத்தக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டது.


விசாரணையின்போது போது சாட்சிகளை அச்சுறுத்துவதன் மூலம் மனுதாரர் அரசு தரப்பு ஆதாரங்களை சேதப்படுத்த கூடாது என்று அலகாபாத் நீதிமன்றம் மேலும் கூறியது.


முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிற அரசியல் தலைவர்களுக்கு எதிராக ஆட்சேபகரமான கருத்துக்களை தெரிவித்ததாக கிழக்கு உ.பி.யில் தியோரியாவில் அகிலானந்த் என்பவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரது ஜாமீன் மனு மீது நீதிபதி சித்தார்த் இந்த உத்தரவை பிறப்பித்தார்.


மே 12 முதல் அகிலானந்த் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் வழக்கில் பொய்யாக சம்பந்தப்படுத்தப்பட்டிருப்பதாக அவரது வழக்கறிஞர் வாதிட்டார்.


ஜாமீன் அனுமதி உத்தரவை வழங்கிய, ​​நீதிபதி  "மனுதாரர் இரண்டு வருட காலத்திற்கு அல்லது விசாரணை நீதிமன்றத்தின் முன் விசாரணை முடிவடையும் வரை, சமூக ஊடகங்களைப் பயன்படுத்த கூடாது" என உத்தரவிட்டார். 


ALSO READ | புகார் கொடுப்பவர் SC/ST என்பதால் மட்டுமே, உயர்சாதியினர் சட்ட உரிமையை மறுக்க முடியாது: SC


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR