புதுடில்லி: பஞ்சாப் வங்கி மோசடி வழக்கில் தப்பியோடிய வைர வியாபாரியான நீரவ் மோடிக்கு பெரும் பின்னடைவாக, நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை இங்கிலாந்து நீதிமன்றம் மீண்டும் நிராகரித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீரவ் மோடியை விசாரணைக்காக நாடு திருப்பி அழைத்து வருவது தொடர்பான வழக்கில், நவம்பர் 3 ம் தேதி நடைபெற்று நடைபெற உள்ள அடுத்த விசாரணைக்கு தென்மேற்கு லண்டனில் (London) உள்ள தனது சிறையிலிருந்து வீடியோ இணைப்பு மூலம் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நீரவ் மோடி வழக்கு இந்தியாவில் (India)  அரசியல் ஆக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் நியாயமான வழக்கு விசாரணை ஏற்பட வாய்ப்பில்லை என்றும், இந்தியாவில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லாததால் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் நீரவ் மோடி வழக்கு இந்தியாவில் அரசியல் ஆக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் நியாயமான வழக்கு விசாரணை ஏற்பட வாய்ப்பில்லை என நீரவ் மோடியின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கடந்த மாதம் இங்கிலாந்து நீதிமன்றத்தில் தெரிவித்தார். 


ALSO READ பாகிஸ்தானில் வலுக்கும் தனி பலுசிஸ்தான் போராட்டம்.. சீனாவிற்கு தலைவலியை கொடுப்பது ஏன்.!!!


13,000 கோடி அளவிற்கு இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலி ஆவணம் கொடுத்து, தனது உறவினர் மெஹுல் சோக்சியுடன் இணைந்து, பணமோசடி செய்த குற்றச்சாட்டில், தப்பி ஓடிய 49 வயதான வைர வியாபாரியை, இந்தியாவிற்கு விசாரணைக்காக அழைத்து வருவதற்கான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது அவர் இப்போது லண்டன் சிறையில் உள்ளார்.


நாட்டை விட்டு தப்பியோடிய நீரவ் மோடி. சிறிது காலம் தலைமறைவாக இருந்த அவர் பின்னர் லண்டனில் கைதுசெய்யப்பட்டார். தற்போது லண்டனில் சிறையில் இருக்கும் நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.


ALSO READ | Islamophobia: ஒரே பதிலில் பாகிஸ்தானின் வாயை அடைத்த பிரான்ஸ் அதிபர்..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR