பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனியார்மயமாக்குவது குறித்து அரசு பதில் அளித்துள்ளது. நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்கும் உத்தியின் ஒரு பகுதியாக, பிஎஸ்என்எல் தனியார்மயமாக்கப்படுமா என்பது குறித்து மீண்டும் மீண்டும் கேள்விகள் எழுப்பப்படும் நிலையில், தற்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனியார்மயமாக்குவது குறித்த தனது நிலைப்பாட்டை மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிஎஸ்என்எல் மீதான தனது நிலைப்பாட்டை அரசாங்கம் இறுதியாக வெளிப்படுத்தியுள்ளது. நஷ்டத்தில் இயங்கி வரும் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-ன் பங்கு விற்பனைக்கான எந்தத் திட்டமும் தற்போது அரசிடம் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது.


 பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனத்தின் பங்குகளை விற்பது குறித்த திட்டம் எதுவும் பரிசீலிக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை தொலைத்தொடர்பு அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.


மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, பதிலளித்த தொலைத்தொடர்புத் துறை இணையமைச்சர் தேவுசின் சவுகான், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பங்கு விற்பனை திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்தார். திமுக எம்பி  கதிர் ஆனந்த், பிஎஸ்என்எல் சொத்துக்களை பங்கு விற்பனைக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமா என்று அரசிடம் கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த  இணை அமைச்சர் இந்த தகவலை அளித்துள்ளார்.


மேலும், நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கட்டிடங்கள், நிலங்கள், கோபுரங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள் உள்ளிட்ட அசையா சொத்துகள் குறித்த விவரங்களையும் தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் கேட்டிருந்த நிலையில், இதற்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் நாடு முழுவதும் உள்ள அனைத்து வட்டங்களிலும் பிஎஸ்என்எல்  நிறுவனத்திற்கு சொந்தமான 3,266 கட்டிடங்கள், 1,388 தொலைத்தொடர்பு கோபுரங்கள் மற்றும் செயற்கைக்கோள்கள், 21,042 தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் 686 தொலைத்தொடர்பு அல்லாத கருவிகள் ஆகியவை உள்ளன என குறிப்பிட்டுள்ளார் .


மேலும் படிக்க | BSNL தனது 4G சேவையை ‘இந்த’ நாளில் தொடங்கலாம்; கவலையில் Jio-Airtel


நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.  கடந்த சில ஆண்டுகளாக நஷ்டம்  தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2020-21 நிதியாண்டில், பிஎஸ்என்எல்லின் மொத்த வருமான இழப்பு ரூ.7,441.11 கோடியாக இருந்தது. கடந்த 2019-20 நிதியாண்டில் ரூ.15,499.58 கோடி இழப்பு ஏற்பட்ட நிலையில், 2018-19 நிதியாண்டில் ரூ.15,000 கோடியாக இருந்தது. இதற்கு முன், 2017-18ம் நிதியாண்டில், இந்நிறுவனம், 7,993 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிகரித்து வரும் நஷ்டம் மற்றும் நிறுவனத்தின் வர்த்தகம் குறைவதைக் கருத்தில் கொண்டு, நிறுவனம் VRS (விருப்ப ஓய்வூதியத் திட்டம்) அறிவித்தது. BSNL நிறுவனத்தின் 78,569 ஊழியர்கள் இந்த திட்டத்தின் விருப்ப ஓய்வு பெற்றனர்.  இதன் காரணமாக 2020-21 இல் இழப்பு குறைந்தது.


பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கடன் தொகையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த நிதியாண்டிலும் (2020-21) இந்நிறுவனம் ரூ.27,033.6 கோடி கடன் பெற்றுள்ளது. அதேசமயம் 2019-20 ஆண்டில் இந்த தொகை ரூ.21,674.74 கோடியாக இருந்தது. அதே நேரத்தில், நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பும் ரூ.59,139.82 கோடியில் இருந்து ரூ.51,686.8 கோடியாக குறைந்துள்ளது. அதாவது, நிறுவனம் தொடர்ந்து பெரும் நஷ்டத்தில் சென்று கொண்டிருக்கிறது.


மேலும் படிக்க | ‘எனக்கு எதுவுமே தெரியாது’ - பார்ட் 2 ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பி.எஸ் சொல்லும் பதில்.!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR