இந்திய பொதுத்துறை வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன்களை வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பி ஓடி தலைமறைவான தொழிலதிபர் விஜய் மல்லையா இன்று லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்கிகளில் வாங்கிய கடனை, விஜய் மல்லையா திரும்ப செலுத்தாததை தொடர்ந்து அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இதனிடையே அவர் கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு தப்பித்துச் சென்றார்.


இதனையடுத்து இந்தியா தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், லண்டனில் விஜய் மல்லையா இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு மாஜிஸ்திரேட்டு இன்று 4–ஆம் தேதி முதல் 14–ஆம் தேதி வரை லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது.



இந்நிலையில் இன்று நீதிமன்றத்தின் முன் விஜய் மல்லையா செய்தியாளர்களிடம் பேசுகையில் "எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நியாயமற்றவை, கர்பனையாக ஜோடிக்கப்பட்டவை" என தெரிவித்துள்ளார்.