தன் நான்கு குழந்தையை கொடூரமாக கொன்ற எதிரியை பழிவாங்கும் தாய்...!
தாயின் கண்முன்னே 4 நாய்க்குட்டிகளைக் கொத்திக் கொன்ற நாகப்பாம்பை பழிவாங்க துடிக்கும் தாய் நாயின் பரிதாப நிலை...!
தாயின் கண்முன்னே 4 நாய்க்குட்டிகளைக் கொத்திக் கொன்ற நாகப்பாம்பை பழிவாங்க துடிக்கும் தாய் நாயின் பரிதாப நிலை...!
ஒடிசா மாநிலத்தில் பத்ரக் பகுதியில் நாகப்பாம்பு ஒன்று நாய்க்குட்டிகள் இருக்கும் பகுதிக்குள் நுழைந்தது. அந்த பாம்பை கண்ட தாய் நாய் தனது குட்டிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால், குட்டிகளை காபற்றும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதைக் கண்டவர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இச்சம்பவத்தை படம்பிடித்துக் கொண்டிருந்த நேரத்தில் அடுத்தடுத்து நாகப் பாம்பு கொத்திய 4 நாய்க்குட்டிகளும் பரிதாபமாக சுருண்டு விழுந்து உயிரிழந்தன.
பாம்புக் கடியில் இருந்து தப்பிய ஒரே ஒரு நாய்க்குட்டி மட்டும் பிழைத்துக் கொண்டது. பின்னர் வந்த வனத்துறையினர் பாம்பைப் பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். ஆனால், தாய் நாயின் கண்முன்னே 4 நாய்க்குட்டிகளும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் காண்போரை சோகத்தில் ஆழ்த்துகிறது.