தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவராக சரத் பவார் நீடிப்பார். என்சிபியின் புதிய தலைவரை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட குழு சரத் பவாரின் ராஜினாமாவை நிராகரித்துள்ளது. குழுவின் கூட்டம் இன்று அழைக்கப்பட்டது. கட்சித் தலைவராக சரத் பவார் தொடர்ந்ததையடுத்து மும்பையில் உள்ள என்சிபி அலுவலகத்திற்கு வெளியே கொண்டாட்ட சூழல் நிலவுகிறது. தொண்டர்கள் சரத் பவாருக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபுல் படேல் கூறிய கருத்து


NCP துணைத் தலைவர் பிரபுல் படேல் இது குறித்து தெரிவிக்கையில்,  மே 2 அன்று சரத் பவார் திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அடுத்த நடவடிக்கைக்காகவும் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்காகவும் கட்சித் தலைவர்கள் குழுவை  தலைவர் பவார்நியமித்தார். இன்று கமிட்டி கூட்டம் நடந்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமைக் குழு, கட்சித் தலைவர் சரத் பவாரை கட்சியை தொடர்ந்து வழிநடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. கட்சிக் குழுவின் முன்மொழிவு குறித்து சரத் பவார் முடிவெடுப்பார் என்றார்.


தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரின் ராஜினாமா அறிவிப்பு


மும்பையில் நடந்த தனது சுயசரிதையான 'லோக் மஜே சங்கதி'யின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பின் வெளியீட்டு விழாவில் சரத் பவார் செவ்வாயன்று NCP தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அவருக்குப் பின் வருபவர் யார் என்பதை முடிவு செய்ய கட்சிக் குழுவையும் அவர் அமைத்தார். அதில் அஜித் பவார், சுப்ரியா சுலே, முன்னாள் மத்திய அமைச்சர்கள் பிரபுல் படேல் மற்றும் சாகன் புஜ்பால் ஆகியோர் அடங்குவர்.


மேலும் படிக்க | NCP தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் சரத் பவார்!


புதிய தலைமை உருவாக்கும் முயற்சி


என்சிபி தலைவர் பதவியை ராஜினாமா செய்வது கட்சியின் எதிர்காலத்திற்காகவும், புதிய தலைமையை உருவாக்குவதற்காகவும் தான் என்று சரத் பவார் வியாழக்கிழமை தெரிவித்தார். தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கட்சி தொண்டர்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அவர் இதனைத் தெரிவித்தார்.


முன்னதாக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத் பவார் அறிவித்தார். மும்பையில் உள்ள ஒய்.பி.சவான் மையத்தில் இரு நாட்களுக்கு முன், அவரது புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த சரத் பவார், நான் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று கூறினார்.


சரத் பவாரை சமாதானப்படுத்தும் முயற்சி


இதற்கிடையில், சரத் பவாரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடந்தன. ஜெயந்த் பாட்டீல் கண்ணீருடன் பவாரிடம் இந்த முடிவை திரும்பப் பெறுமாறு வேண்டுகோள் விடுத்தார். சரத் ​​பவார் காங்கிரஸில் இருந்து விலகி 1999ல் என்சிபியை உருவாக்கினார். சமீபத்தில், அவர் சூசகமாக, சப்பாத்தி செய்யும் போது, சப்பாத்தியை சரியான நேரத்தில் திருப்பவில்லை என்றால் கருகி விடும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


'சப்பாத்தியைத் திருப்பவில்லை என்றால் கருகி விடும்'


சில நாட்களுக்கு முன்பு, மும்பையில் நடந்த என்சிபி இளைஞர் காங்கிரஸின் இளைஞர் சங்கல்ப நிகழ்ச்சியில் பேசிய பவார்,  ‘சப்பாத்தியை தயாரிக்கும் போது, கல்லில் அதனை திருப்ப வேண்டும், அதை சரியான நேரத்தில் திருப்பாமல் தாமதப்படுத்துவது பலனளிக்காது. சப்பாத்தி கருகி விடும் என்றார்.


மேலும் படிக்க | இலவச காஸ் சிலிண்டர்... தினமும் அரை லிட்டர் நந்தினி பால்... பாஜக தேர்தல் அறிக்கை!


மேலும் படிக்க | காங்கிரஸ் என் மீது 91 முறை அவதூறுகளை வீசியுள்ளது... ஆனால்... கர்நாடகாவில் பிரதமர் மோடி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ