இராணுவ கேன்டீன்களில் சீன பொருட்கள், இறக்குமதி செய்யப்பட்ட மதுபானம் ஆகியவற்றை விற்க தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் , உள்ளூர் தயாரிப்பு பொருட்களை வாங்க ஊக்குவிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக சீனா உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை மிலிட்டரி கேண்டீன்களில் விற்பனை செய்வதை தடைசெய்வது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.


பாதுகாப்பு துறையின் கேண்டீன் ஸ்டோர்ஸ் டிபார்மெண்ட் (CSD) நாட்டின் மிகப்பெரிய சில்லறை விற்பனை சங்கிலிகளில் ஒன்றாகும். இவை மிலிட்டரி கேண்டீன்கள் என்று அழைக்கப்படுகின்றன.  வடக்கில் சியாச்சின் பனிப்பாறை முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் வரை, நாடு முழுவதிலும், 3,500 க்கும் மேற்பட்ட கேன்டீன்கள் பரவியுள்ளன.


ALSO READ | பயங்கரவாதத்தின் தந்தை பாகிஸ்தான்... காஷ்மீர் விஷயத்தில் தெளிவான பதிலளித்த இந்தியா..!!!


CSD மூலம் விற்கப்படும் 5,000 க்கும் மேற்பட்ட வெவ்வேறு பொருட்களில், சுமார் 400 இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் ஆகும். இவற்றில், பெரும்பாலான பொருட்கள் சீன நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள். கழிப்பறை ப்ரஷ்கள், டயபர் பேன்ட், ரைஸ் குக்கர்கள், மின்சார கெட்டில்கள், சாண்ட்விச் டோஸ்டர்கள், வாக்குவம் கிளீனர்கள், சன்கிளாஸ்கள், பெண்களின் கைப்பைகள், மடிக்கணினிகள் மற்றும் டெஸ்க்டாப் கணினிகள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.


CSD கவுண்டர்கள் மூலம் இந்த பொருட்களை விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டு, அதற்கு பதிலாக இந்திய தயாரிப்புகள்  இங்கு விற்பனை செய்யப்படும் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.


இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களை கேன்டீன்களில் விற்பனை செய்வதும் தடை செய்யப்படும் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த பல மாதங்களாகவே, கேன்டீன்களில் அதிக விலை கொண்ட வெளிநாட்டு மதுபான பிராண்டுகள் கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | எல்லை பதற்றத்திற்கு மத்தியில், ராஜ்நாத் சிங் துருப்புகளுடன் விஜயதசமியை கொண்டாடுகிறார்..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR