இந்தியாவிலே முதல்முறையாக வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்து மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுப்ரீம் கோர்ட் மற்றும் நாடு முழுவதும் உள்ள ஐகோர்ட்டில் பணியாற்றும் நீதிபதிகள் நியமனத்தை தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் என்ற அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப் மற்றும் மூத்த பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா ஆகிய இருவரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.


இவர் பிரபல வழக்கறிஞர் ஓம் பிரகாஷ் மல்ஹோத்ரா மகள். 1983-ம் ஆண்டு தனது வழக்கறிஞர் தொழிலை பார் கவுன்சலில் பதிவு செய்தார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு 2007-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த பெண் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். முதல் பெண் மூத்த வழக்கறிஞராக லீலா சேத் நியமிக்கப்பட்டிருந்தார்.


விரைவில் இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி அலுவலகம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2007-ம் ஆண்டு முதல் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞராக இந்து மல்ஹோத்ரா செயல்பட்டு வருகிறார். அவர் நீதிபதியாக நியமிக்கப்படும் பட்சத்தில், வழக்கறிஞராக இருந்து நேரடியாக சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகும் முதல் பெண் என்ற பெருமைக்கு உள்ளாவார் என்பது குறிப்பிடத்தக்கது.