மும்பை: மும்பையில் இன்று நடைபெறும் சத்ரபதி சிவாஜி சிலை பூமி பூஜை விழாவில் பிரதமர் மோடி வருகை. அவரது வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் பிரதமர் மோடி மும்பை மற்றும் புனேயில் உள்ள மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடங்கிவைக்கிறார். அதே நேரத்தில், மோடி அங்கு புதிதாக கட்டப்பட்ட காம்புஸ் ஒன்று திறந்து வைக்க உள்ளார்.


மராட்டிய பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைசிறந்து விளங்கியவர் சத்ரபதி சிவாஜி. 


ராணுவத்தில் சீர்திருத்தங்களை வகுத்து, போர்களில் கொரில்லா உத்திகளை பயன்படுத்தி பல கோட்டைகளையும், பகுதிகளையும் கைப்பற்றி மராட்டிய பேரரசு விரிவடைய வித்திட்டவர்.


மராட்டியர்களின் வளர்ச்சிக்கு காரணமாக விளங்கிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் புகழை உலகறிய செய்யும் வகையில் மராட்டிய அரசு மும்பை அரபிக்கடலில் அவருக்கு மிக உயரமான சிலை மற்றும் நினைவு மண்டபத்தை நிறுவ உள்ளது.


இந்த சிலை அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை காட்டிலும் உயரமானதாக நிறுவப்பட இருக்கிறது. மன்னர் சத்ரபதி சிவாஜி சிலை அமைய உள்ள இடத்தில் இன்று பூமி பூஜை நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
 
சத்ரபதி சிவாஜியின் முழு உருவச்சிலை வைக்கப்பட்டு இருந்தது. பாஜகாவினர் தலைப்பாகை அணிந்து மோட்டார்சைக்கிளில் அலங்கார ஊர்திக்கு பின்னால் பேரணியாக வந்தனர். பாஜகாவை சேர்ந்த மாநில மந்திரிகளும் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.


ஊர்வலம் கிழக்கு விரைவு சாலையில் சயான், மாட்டுங்கா, தாதர், பரேல், லால்பாக், பைகுல்லா, சி.எஸ்.டி. வழியாக கேட்வே ஆப் இந்தியாவை சென்றடைந்தது. சயானில் ஊர்வலம் நடந்த போது பா.ஜனதா எம்.எல்.ஏ. கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. தலைமையில் அக்கட்சியினர் மலர்களை தூவி ஊர்வலத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.


கேட்வே ஆப் இந்தியா-வை சென்றடைந்தது புனித நீர் மற்றும் கலசங்களை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம் வழங்கப்பட்டன. 


அந்த கலசங்கள் சிவாஜி சிலை அமையவிருக்கும் இடத்திற்கு கிர்காவில் இருந்து இரண்டு சொகுசு படகுகள் மூலம் எடுத்து செல்லப்படுகிறது.


அந்த படகில் பிரதமர் நரேந்திர மோடி, கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சத்ரபதி உதயன் ராஜே, சத்ரபதி சம்பாஜி ரானே மற்றும் பூமி பூஜை சம்பிரதாயங்களை செய்யும் மதகுருமார்கள் செல்கிறார்கள்.


பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி மும்பை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.